கண்டி தலைமையகப் பிரதம பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் பத்திரணவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, அவரது அறிவுறுத்தலின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எஸ். யூ. கே. லியனாரச்சி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால், இந்த புத்திசிலையுடன் சந்தேகநபர்களை இவ்வாறு கைது செய்ய முடிந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மஹியங்கனை ரஜமகா விகாரையிலிருந்து இந்த புத்திசிலை 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி திருடப்பட்டுள்ளது. பின்னர், கடந்த மே 14ஆம் திகதி இது கண்டி நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டு, காரொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைத்து இச்சிலையின் சில பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டு, அது என்ன உலோகம் என்பதைக் கண்டறிவதற்கான உலோகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான அறிக்கையொன்றும் இவர்களால் பெறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற வாரண்ட் அதிகாரிகள் இருவராலேயே இப்பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த காரும் கண்டி, குமார வீதியில் வைத்துப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவரும் பதுளைப் பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.