பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) அன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“உலக சுகாதார தாபனத்தின் அறிக்கைக்கு அமைய, ஆண்டுக்கு 13,000 முதல் 20,000 பேர் சிகரெட் பாவனைக்கு அடிமையாகின்றனர். இலங்கையில் தற்போது 75 சதவீதமானோர் சிகரெட் பாவனைக்கு அடிமையாகியுள்ளதுடன், பெண்கள் சிகரெட் பயன்படுத்தும் வீதம் அண்மைக்காலமாக உயர்வடைந்துள்ளது.
160 ரூபாய் பெறுமதியான சிகரெட் ஒன்றுக்கு 109 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது. இதனால் நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள் கொண்டுவரப்படுகின்றன. இதனால் பெரும்பாலானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டவிரோத செயற்பாட்டால் அரசாங்கம் பாரிய வருவாயை இழக்கிறது. ஆகவே, சட்டவிரோதமான முறையில் சிகரெட் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
அதேபோல், மதுபான போத்தல் ஒன்றின் விலை தற்போது 3,700 ரூபாவாக உள்ளது. இந்தத் தொகையில் 2,200 ரூபாவை அரசாங்கம் வரியாக அறவிடுகிறது. மதுபானத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதால், பெருமளவிலான பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. சட்டவிரோத மதுபானங்களை அருந்தி பலர் உயிரிழந்துள்ளனர்.
ஆகவே, சிகரெட் மற்றும் மதுபானம் மீதான வரியை மறுசீரமைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், சிகரெட் மற்றும் மதுபானம் மீதான வரியைக் ‘கர்மவரி’ என்றே குறிப்பிட வேண்டும்” என்றார்.