எரிபொருள் விலை மட்டும் பேருந்து கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல எனவும், ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், டீசல் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரையில் குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.