சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவற்குழி பகுதியில், 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே 36 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயினுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 கிராம் 540 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.