போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

நேற்றைய தினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைப் பொருள்கள் போன்றனவற்றை பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் சமுதாயத்திற்கு விற்பனை செய்து வந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும் 12370 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 61000 மில்லி கிராம்  கஞ்சாவும் மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்த பணமும் அவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட கூரியவால் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

மேற்படி, சந்தேகநபரையும் சான்று பொருள்களையும் வெல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர்  வழிநடத்தலில் இடம்பெற்றதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர்  யாழ்ப்பாணம் பொலிஸாரால் வியாழக்கிழமை ​(18) கைது செய்யப்பட்டுள்ளார்

இதன் போது 120 மில்லி கிராம் நிறையுடைய கொக்கெயின்   கைப்பற்றப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயதுடைய   நபராவார்

 சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.