மின்சார கதிரையில் ஏற்றப்பட வேண்டிய சிறிதரன் எம்.பி!

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டு உள்ள போர்க் குற்ற விசாரணை அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக சாடப்பட்டு உள்ளார். விடுதலைப் புலிகளின் ஆட்கடத்தல், கட்டாய ஆட்சேர்ப்பு ஆகியவற்றுக்கு புலி முக்கியஸ்தர் ஒருவரின் நெருக்கமான உறவினரும், அப்போது பாடசாலை அதிபருமான இவர் உதவி, ஒத்தாசை வழங்கினார் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இவர் அதிபராக இருந்து வந்த பாடசாலையின் மாணவர்களை இவரே புலிகளுக்கு காட்டிக் கொடுத்து வந்தார் என்று இதில் கூறப்பட்டு உள்ளது. இதனால் இவரின் காட்டிக் கொடுப்புகளுக்கு பயந்து பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தனர் என்றும் இதில் உள்ளது.

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ள விடயங்களை படித்து, ஆராய்ந்து, தொகுத்து கட்டுரையாக எழுதி உள்ளார் பிரசித்தி வாய்ந்த புலனாய்வு ஊடகவியலாளர் டி. பி. எஸ். ஜெயராஜ்.
குறித்த அதிபரின் காட்டிக் கொடுப்புக்கு பயந்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கிளிநொச்சி – ஆனந்தபுரத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் கிபீர் விமானத்தின் குண்டு வீச்சில் இறக்க நேர்ந்த துயரத்தை ஜெயராஜ் வெளிப்படுத்தி உள்ளார்.
இப்பிள்ளைகளுக்கு வயது 18, 20. குடும்பத்தை சேர்ந்த அனைவருமே இத்தாக்குதலில் இறந்து போனார்கள் என்றும் ஜெயராஜ் சுட்டிக் காட்டி உள்ளார்.