இதன் அடிப்படையில், இலங்கையில் இன்று (27) மாத்திரம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் மாத்திரம் 12,000 ரூபாவினால் தங்க விலை அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, நேற்றைய தினம் 329,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளது.