முல்லைத்தீவில் 9 மீனவர்கள் கைது

முல்லைத்தீவு கடற்பரப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு உள்ளிட்ட களப்புக்களில் சட்ட விரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துமாறு தொடர்ச்சியாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மிக தீவிரமாக  சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்துவதற்கான அணி ஒன்று செயற்பட்டு வருகின்றது.

 அந்த வகையில் கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் விசேட அதிரடிப்படையினர் கடற்படையினர் ஆகியோர் இணைந்து அண்மைய  நாட்களாக மிக தீவிரமாக சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.