தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்ற விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட வீரர், இதுவரை 63,421 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை மிதிவண்டியில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ்நாடு முழுவதும் பல விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது யாழ்ப்பாணத்தில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
மனநல விழிப்புணர்வு, தற்கொலை தடுப்பு, மனிதநேயம் மற்றும் கருணை, நம்பிக்கை மற்றும் மனநல நலன், மற்றும் உலக அமைதி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
“ஒவ்வொரு வாழ்க்கையும் மதிப்புமிக்கது; நீங்கள் தனியாக இல்லை; நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்” என்பதே இவரது இப்பயணத்தின் செய்தியாக அமைந்துள்ளது.