வட்டத் தொகையாக பேருந்து கட்டணம் வேண்டும்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, நடத்துநர்கள் பயணிகளின் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தைச் சுரண்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

“உதாரணமாக, 34 ரூபாய், 44 ரூபாய், 54 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கான அதிகபட்ச கட்டணமான 5,571 ரூபாய் போன்றவை, பயணிகளைச் சட்டவிரோதமாகச் சுரண்டுவதற்கு வழிவகுக்கின்றன. நடத்துநர்கள் சில்லறை இல்லை என்ற போலி காரணத்தைக் கூறி, பயணிகளுக்குத் திரும்ப வழங்க வேண்டிய மீதிப் பணத்தைத் தருவதில்லை. இதன் மூலம், பயணிகளுக்குக் கிடைக்க வேண்டிய 6 ரூபாய், 5 ரூபாய் அல்லது 9 ரூபாய் போன்ற சிறு தொகைகள் கூட திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. இது நடத்துநர்கள் முறையற்ற வழிகளில் பணம் ஈட்டுவதற்கு வழிவகுக்கும் ஒரு பாரதூரமான அநீதியாகும்.”

“உதாரணத்திற்கு, 44 ரூபாய் பேருந்து கட்டணத்திற்கு 50 ரூபாயைக் கொடுக்கும்போது, நடத்துநர் மீதிப் பணத்தைத் திருப்பித் தர மறுக்கிறார். அதேபோல், 56 ரூபாய் கட்டணம் உள்ள இடத்தில் பயணி 60 ரூபாயைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். மீதிப் பணத்தைக் கேட்டால், அந்தப் பயணி நடத்துநரின் கடுமையான வசவுகளுக்கு உள்ளாக நேரிடுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

எனவே, பேருந்து கட்டணங்களை வட்டத் தொகைகளாக (Round figures) மாற்றியமைக்க வேண்டும் என்றும், நடத்துநர்கள் பணத்தைப் பதுக்குவதற்குப் பதிலாக, மேலதிகமாக வசூலிக்கப்படும் பணத்தைப் பொது நலன்புரி நிதியமொன்றில் வரவு வைக்கும் முறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply