இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களிடம் வினவியபோது, “இந்த முன்மொழிவு உட்பட மேலும் சில ஆலோசனைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் விநியோகம் தொடர்பான புதிய திட்டங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.