விடுமுறை காலத்தில் அதிகப்படியான கல்விச் சுமை தர வேண்டாம்

பெண்கள், இளையோர் மற்றும் குழந்தைகள் வேலைவாய்ப்புச் சட்டம் தொடர்பான திருத்தச் சட்டம் மீதான பாராளுமன்ற இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமரின் முக்கிய கருத்துகள்:

பாடசாலைகள்  உயர் தரத்திற்கு உயர்த்த முற்படும் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்த பிரதமர், அதேவேளை குழந்தைகளுக்கும் விடுமுறை அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளின் மனநலனுக்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் ஓய்வு அவசியமென்பதோடு, அவர்களின் மனதுக்குச் சுதந்திரமும் ஓய்வும் தேவைப்படுவதாகக் கூறினார்.

எனவே, விடுமுறை காலத்தில் குழந்தைகள் மீது அதிகப்படியான கல்வி அழுத்தங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பெற்றோரையும் ஆசிரியர்களையும் அவர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply