வெனிசுவேலாவிலிருந்தான 2ஆவது கப்பலைக் கைப்பற்றிய ஐ. அமெரிக்கா

ஐ. அமெரிக்காவானது வெனிசுவேலாக் கடற்பரப்பிலிருந்தான எண்ணெய் கொண்டு செல்லும் கப்பலை கைப்பற்றுவது இம்மாதம் இரண்டாவது தடவையாகும்.

பனாமாக் கொடியுடனான செஞ்சரிஸ் என்ற குறித்த கப்பலானது கடந்த ஐந்தாண்டுகளில் கிரேக்க, லைபீரியக் கொடியுடனும் பயணித்துள்ளதுடன், ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இக்கப்பல் காணப்படவில்லை.