1 மில்லியன் மக்களுக்குப் போதைப்பொருள் விழிப்புணர்வு

“ ‘மனம் எவ்வாறோ, நாமும் அவ்வாறே’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘செழிப்பான மனதின் மூலம் போதைப்பாவனையிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்’ எனும் தொனிப்பொருளினூடாகப் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் இத்தேசிய செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, அடுத்த 18 மாத காலத்திற்குள் ஒரு மில்லியன் மக்களை நேரடியாகச் சந்தித்துப் போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இச்செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவின் தலைமையில், மட்டக்களப்பு – கல்லடி கடற்கரையில் எதிர்வரும் 28ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இச்செயற்திட்டத்தின் மூலம் தேசிய ரீதியிலான பிரகடன வெளியீடு, போதைப்பொருள் விழிப்புணர்வுப் பாடல் வெளியீடு மற்றும் போதைப்பொருள் தீங்குகள் சம்பந்தமான விழிப்புணர்வுப் பதாதைகள் (Banners) காட்சிப்படுத்தல் என்பன இடம்பெறவுள்ளன.

பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் இலங்கையில் கடந்த 35 வருடங்களாகத் தொடர்ச்சியாக இவ்வாறான சமூகச் சேவையாற்றி வருகின்றது” என ஒருங்கிணைப்பாளர் கே. சுரேஷ் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply