17 ஆண்டுகளின் பின்னர் திரும்பிய பங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவர்

இலண்டனுக்கு 2008ஆம் ஆண்டு சென்ற முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவின் மகனான ரஹ்மான், டாக்காவுக்கு இன்று சென்றிருந்தார்.

தேசியவாதக் கட்சியின் பதில் தலைவரான ரஹ்மானை வரவற்க இலட்சக்கணக்கானோர் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னணி பிரதமர் வேட்பாளராக ரஹ்மான் காணப்படுகின்றார்.