18 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா மீட்பு- மூவர் கைது

இதன்போது, 18 கிலோ 200 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

மன்னார் பொலிஸ் பிரிவின் மன்னார் நகரில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 200 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அடம்பன் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸாரால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, வியாழக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவை கைப்பற்றப்பட்டன.