6 மாதங்களில் லஞ்சம் தொடர்பான சம்பவங்களில் 34 பேர் கைது

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைத்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டு, 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த சந்தேக நபர்களில் இலங்கை பொலிஸை சேர்ந்த 10 அதிகாரிகள், நீதி அமைச்சின் 5 அதிகாரிகள், சுகாதார அமைச்சின் 2 அதிகாரிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைளைச் சேர்ந்த 2 அதிகாரிகள் அடங்குவர்.

கூடுதலாக, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக 6 பொதுமக்கள் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், லஞ்சம் தொடர்பான 60 சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் 50 சட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும், 6 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன, அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 273 லஞ்சம் தொடர்பான வழக்குகள் தற்போது விசாரிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.