இந்நிலையில், உகாண்டா ஜனாதிபதித் தேர்தல் வௌ்ளிக்கிழமை (16) அன்று நடைபெற்றது. இதில், யோவரி முசவேனி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான பாபி ஒயின் போட்டியிட்டார். இந்த தேர்தலில் யோவரி முசவேனி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
யோவரி முசவேனி 71.65 சதவீத வாக்குகள் வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7வது முறையாக யோவரி முசவேனி உகாண்டா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேவேளை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் பாபி ஒயின் குற்றஞ்சாட்டி வருகிறார்.