அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழல் மற்றும் குற்றங்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கூறிய பிரதமர் அந்த மக்கள் விரோத ஊழல் மற்றும் குற்றங்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், பயந்து குழப்பமடைந்த அரச மற்றும் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்கள், அரசியல் ஆசீர்வாதத்துடன் இவை அனைத்தையும் தொடர்ந்ததாகவும் கூறினார்.