ஒரு வாக்குமூலம்

நவம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை ஸ்காபரோ யுடவழn வுழறநச Pயசவல ர்யடட இல் அறிமுகம் செய்து வைக்கப்படும் “தாங்கொணா துன்பம்” நூலிலிருந்து….

-சாந்தி விவேகானந்தன்-

பெற்றோரின் பிள்ளை. எனது கணவர். என் பிள்ளைக்கு தந்தை. தங்களது?
செப்டெம்பர் 14, 1990 ஆம் ஆண்டு. அது ஒரு இரவு நேரம் நாங்கள் அனைவரும் நித்திரையில் இருந்தோம். இந்த இரவுதான் எனக்கும் அன்ரனுக்கும் எங்களது மகன் மகிந்தனுக்குமான கடைசி இரவு என்பது எனக்கு அப்போது தெரியாது. இரவு 10 மணியளவில் “அண்ணை அண்ணை” என்று யாரோ கூப்பிடும் சத்தம் எனக்குக் கேட்டது. நான் எழுந்து யாரோ வெளியிலிருந்து கூப்பிடுகிறார்கள் என்று எனது கணவரை எழுப்பிச் சொன்னேன். அவர் டோர்ச் லைட்டால் ஜன்னல் வழியாக பார்த்தார். அங்கே இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.

(“ஒரு வாக்குமூலம்” தொடர்ந்து வாசிக்க…)

சாமானிய வெள்ளையின அமெரிக்கர்கள், தம்மில் ஒருவராகவே டொனால்ட் டிரம் பை பார்திருக்கிறார்கள்,

சாமானிய வெள்ளையின அமெரிக்கர்கள், தம்மில் ஒருவராகவே டொனால்ட் டிரம் பை பார்திருக்கிறார்கள், எனெனில் அவர் பேசியது வார்த்தை அலங்காரமில்லாத சாமானிய மொழி. பெண்கள் தொடர்பாக அவர் பேசியது எல்லாம் பொதுவாகவே எல்லா ஆண்களும் பேசுவதுதான். முகமூடி அணிந்தவர்கள் மறுக்கலாம். குடியேற்றம் அதிகமானால் தாம் சிறுபான்மையினராகி விடுவோமோ என்ற பயவுணர்வு

(“சாமானிய வெள்ளையின அமெரிக்கர்கள், தம்மில் ஒருவராகவே டொனால்ட் டிரம் பை பார்திருக்கிறார்கள்,” தொடர்ந்து வாசிக்க…)

“இது கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைப்போல பெரிய நகைச்சுவை ஏதுமில்லை”

(டாக்டர் பிரபாத் பட்நாயக் அவர்கள் வாழும் மூத்த பொருளியல் அறிஞர்களில் ஒருவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் “தகுதிமிகு உயர் பேராசிரியராக” (Professor Emeritus) ஆக ஏற்கப்பட்டுள்ளவர். மார்க்சீய நோக்கில் ‘பணமதிப்பு’ , “ஏகாதிபத்தியம்” முதலானவை குறித்து எழுதப்பட்ட சில மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். “கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிப்பதற்காக” எனச் சொல்லி இன்று 1000 மற்றும் 500 ரூ நோட்டுகள் செல்லாது என அறிவித்து நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை எத்தனை போலித்தனமானது என்பதை விளக்கி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் thecitizen.com ல் எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று. அதன் முக்கிய கருத்துக்களை இங்கே தொகுத்துள்ளேன். எனினும் இது அக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு அல்ல)

(““இது கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைப்போல பெரிய நகைச்சுவை ஏதுமில்லை”” தொடர்ந்து வாசிக்க…)

சாதி,இனம்,மதம்,மொழி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருகோணமலை சேருநுவர என்னும் இடத்தில் உள்ள ஒரு பாடசாலையில் சிங்கள சிறுமி சப்பாத்து இல்லாத காரணத்தால் செருப்பு அணிந்து சென்றதால் அந்த செருப்புகளை அந்த மாணவியின் கழுத்தில் தொங்க வைத்தார் ஒரு ஆசிரியை.- சிங்களம்
(“சாதி,இனம்,மதம்,மொழி” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 75 )

1977 இல் ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தபின் முல்லைத்தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது.சர்வ அதிகாரம் படைத்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உள்ளூராட்சி அமைச்சின் விதிமுறைகளுக்குப் புறம்பாக நீதிபதியாக இருந்த ஞானச்சந்திரன் என்பவரை முல்லைத்தீவு அரசாங்க அதிபராக நியமித்தார்.ஞானச்சந்திரன் முன்னைய ஆட்சியில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தயவில் நீதிபதி நியமனம் பெற்றவர்.பின்னர் ஐ.தே.க ஆதரவாளராக மாறி இப்போது அரசாங்க அதிபராக நியமனம் பெற்றார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 75 )” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க தேர்தல் முடிவும் காலப் பயணமும்……! ட்றம் இன் வெற்றியும் எதிரொலிக்கும் ஏமாற்றங்களும்….!!

(சாகரன்)

அமெரிக்க தேர்தல் முடிவும் காலப் பயணமும்……! ட்றம் இன் வெற்றியும் எதிரொலிக்கும் ஏமாற்றங்களும்….!!
(விஞ்ஞானத்துடனான அமெரிக்க தேர்தல் பார்வை சலிப்பூட்டினால் மன்னிக்கவும்)

காலப் பயணம் (Time travel) கால இயந்திரம் (Time machine) என்பன தற்போது நடைமுறையில் உள்ள மூன்று பரிமாணத்தில் (முப்பரிமாணம்) இருந்து நான்காவது பரிமாணம் என்ற மாற்றத்தின் அடிப்படையில் உருவான விஞ்ஞான நம்பிக்கைகள் ஆகும். இதில் நீளம்(L), அகலம்(W), உயரம்(H) என்ற முப்பரிமாணத்திற்கு அப்பால் நான்காவது பரிமாணமாக நேரம்(T) (time) இணைக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானம் நம்புகின்றது. எமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் ஏனைய சூரியகக் குடும்பங்களுக்கு செல்லும் போது இந்த நான்காவது பரிமாணத்திற்கு உண்மையான அர்த்தம் உண்டு, ஏன் தேவையும் உண்டு என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

(“அமெரிக்க தேர்தல் முடிவும் காலப் பயணமும்……! ட்றம் இன் வெற்றியும் எதிரொலிக்கும் ஏமாற்றங்களும்….!!” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்கா மட்டுமல்ல அகில உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது.

எவன் அமெரிக்க சனாதிபதியாகத் தெரிவாகக்கூடாதென எதிர்பார்த்தார்களோ அவனே தெரிவாகியிருக்கிறான். எவரும் கனவில்கூடக் கண்டிராத பேராதரவுடன்.
ஹிலாரி என்ற அமெரிக்க சூர்ப்பனகைதான் முடிசூடுவாளென எதிர்பார்த்த எல்லார் வாயிலும் மண்ணை அள்ளிப்போட்டு வாயையும் இறுக்கமாய் மூடிவிட்டான் திரம்ப். அரசியல் ஞானசூனியமான இவனால் எப்படி இந்த இமாலய வெற்றியைச் சம்பாதிக்க முடிந்தது?
ஹிலாரி அமெரிக்கர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும் பார்க்கத் தனது சுயசரிதத்தின் பக்கங்களைப் புரட்டுவதிலேயே அதிகம் அக்கறை காட்டிக்கொண்டாள்.

(“அமெரிக்கா மட்டுமல்ல அகில உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது.” தொடர்ந்து வாசிக்க…)

நிக்கரகுவா: அமெரிக்காவிற்கு அருகில் கொண்டாட வேண்டிய தேர்தல் வெற்றி

(சாகரன்)
ஞாயிறு நடைபெற்ற தேர்தலில் 4 வது முறையாக நிக்கரகுவா இன் தலைவராக 70 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார். தொடர்ந்தாற் போல் மூன்று தடவையும் சோசலிசப் புரட்சி மூலம் முதல்தடவையும் நாட்டின் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டவர். இடையில் ஒரு தடவை மட்டும் அமெரிக்க ஆதரவு எதிர் கட்சியிடம் தோற்கடிக்கப்பட்டவர். ஐந்து வருடங்களின் பின்பு நடைபெற்ற அடுத்த தேர்தலில் வென்று இன்றுவரை தொடர்ந்தாற் போல் 4 வது தடவை வெற்றியை தனதாக்கி கொண்டிருக்கும் ஒரே தலைவர். இடதுசாரி அரசை நிறுவி நிறைவான வாழ்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் வெற்றிப்பாதையில் நாட்டை நகர்த்திச் செல்கின்றார். தோல்வியை சந்தித்த 5 வருட கால வாழ்வில் பெரும்பாலும் குதிரை ஒன்றில் பயணங்களை மேற்கொண்டு மக்களைத் தொடர்ந்தாற்போல் சந்தித்து வந்தவர். நமது நாடு போலல்லாது இவரை அமெரிக்க சார்பு எதிர் புரட்சியாளர்கள் தமது ஆட்சிக்காலத்தில் கொல்லவில்லை. இதனால் நிக்கரகுவா ஒரு நல்ல மக்கள் தலைவரை இன்றுவரை தனக்குள் கொண்டுள்ளது. அவர்தான் டானியல் ஓடேகா. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிக்கரகுவா அயல்நாடுகளை விட வன்முறை குறைந்த அமைதியான சீரான பொருளாதார வளர்சியைக் கண்டு சிறப்பான வாழ்வை கொண்டு வெற்றி நடைபோடும் இடதுசாரி ஆட்சி முறையைக் கொண்ட நாடு ஆகும். அமெரிக்க தேர்தலை விட இதனை நாம் அதிகம் கொண்டா வேண்டிய தருணம். நிக்கரகுவா வரலாற்றை அறிய வேண்டிய அவசியமும் கூட.
(Nov 09, 2016)

பற்குணம் A.F.C (பகுதி 74 )

பற்குணம் தனது நிர்வாகத்தில் மற்றவர்களை நம்பினாலும் தனது கவனத்தை திசை திரும்பவிடுவதில்லை.அடிக்கடி தனது அலுவலக கணக்குகளையும் தானே பார்ப்பார்.இவ்வாறு ஒரு நாள் மன்னாரில் தனது அலுவலக கணக்குகளை மீளாய்வு செய்தபோது 50000 ரூபா அவரின் பெயரால் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 74 )” தொடர்ந்து வாசிக்க…)