மக்கள் எழுச்சியை கண்டு அஞ்சி நடுங்கும் மேட்டுக்குடி அரசியல்

தமிழ் சமூகத்தின் பிற்போக்கு தலைமைகளால் முன்னெடுக்கப்படும் மேட்டுக்குடி அரசியலை தோற்கடிக்க உழைக்கும் மக்களை அணிதிரட்டி இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் சுயேட்சைக் குழு – 2 (மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி – பட்டம் சின்னம்) ஐப் பார்த்து அஞ்சி நடுங்கிப் போயிருக்கிறார்கள் தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிகள்.

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சி(SDPT)

வன்னி மண்ணின் துரித அபிவிருத்திக்கு தேசிய அரசாங்கத்தோடு எமது அடிப்படை உரிமைகள், கலாசாரங்கள் சிதைக்கப்படாத வகையில் இணைந்து செயற்படுதல் இன்றய காலத்தின் கடமையாகும் . வன்னி பெரு நிலபரப்பு மக்கள் அண்ணன் உதயராசாவை தலைமையாக கொண்ட அணியை ஆதரித்து, மெழுகுதிரிக்கு வாக்களிப்பதன் மூலம், தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெறுவதன் மூலம் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழருக்குப் பெறக்கூடிய உச்சபட்ச அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளும் சாணக்கியத்தைப் பயன்படுத்துங்கள்.

யார் ஆட்சி அமைத்தாலும் ஏனையவர் பலமாகவே இருப்பர்.உதாரணமாக முஸ்லிம்கள் . ஆனால் வன்னியில் தமிழர் தனித்தொரு கட்சியை விரோதக்கட்சியாக முத்திரைகுத்துவதனூடாக, அக்கட்சியின் ஆட்சியின்போது முழு நட்டத்தையும் அனுபவிக்கும் இனமாகவேயுள்ளனர். யுத்தகாலம் தொட்டு இன்றுவரை ஏனையோர் நலமடைந்து, தமிழருக்கு சேரவேண்டிய நலன்களையும் இடைமறித்து தாமே அனுபவித்து வந்த வரலாறுகளை மனதிற்கொண்டு, யாருக்கும் துரோகிப்பட்டம் கட்டாது தமிழினத்திற்கு நல்லது சம்பாதிக்கும் வழியை சாணக்கியத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் அல்லது பேண்தகு நிலையில் எவ்வாறு ஒரு புகையிரத பாதையில் இரு சமாந்தர தண்டவாளங்கள் எவ்வாறு முக்கியமோ அவ்வாறே உரிமைசார் அரசியலும் அபிவிருத்திசார் அரசியலும் ஆகும் .அபிவிருத்திசார் அரசியலை சிறந்த முறையில் செயற்படுத்த ஆட்சியிலுள்ள அரசுடன் இணைந்து அமைச்சு பதவியினை பெற்று கொள்வதன் மூலமே சாத்தியமாகும் .இதன் மூலமே பல வளங்களையும் ,மிதமிஞ்சிய தொழிலாளி வர்க்கத்தையும் கொண்ட வன்னி பெருநில பரப்பில் பல தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் பாட்டாளி வர்க்க சமூகம் வேலையில்லா பிரச்சனையையும் நிவர்த்தி செய்ய முடியும் . வன்னி பெரு நிலப்பரப்புக்குரிய தனி பல்கலைக்கழகம், நவீன வசதிகளுடைய பாடசாலைகள், புதிய பிரதேச சபைகள் ,நவீன விளையாட்டு மைதானங்கள்,சுற்றுலாதலங்கள் உட்கட்டுமான அபிவிருத்திகள் அமைய வேண்டும்,முன்னாள் போராளிகளுக்கு,பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாழ்வாதாரம் வழங்குதல்,தகுந்த தொழில் வாய்ப்புக்களை வழங்குதல் வேண்டும். வரலாற்று தடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் .
எனவே 6 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட 75 வீதம் தமிழர்களைக் கொண்ட வன்னித் தேர்தல் தொகுதியில் 3 தமிழ் பிரதிநிதிகளை உரிமைசார் அரசியலுக்கும் 2 தமிழ் பிரதிநிதிகளை அபிவிருத்திசார் அரசியலுக்கும் 1 மாற்று இன பிரதிநிதியையும் தேர்வு செய்வதன் மூலமுமே வன்னியின் இருப்பையும் அபிவிருத்தியையும் உறுதிசெய்யலாம் தமிழர் ஆயிரம் கட்சியில் இருந்தாலும் 220000தமிழ் வாக்காளர்கள் 40000 முஸ்லீம் வாக்காளர்கள் 17000 சிங்கள வாக்காளர்களை கொண்ட 75 வீதம் தமிழர்களை கொண்ட வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் பிரதி நிதிகளை தேர்வு செய்வதன் மூலமே தக்கன பிழைக்கும் என்னும் விஞ்ஞானப்படி, தமிழர் நலம்பெறலாம்.இலவசமாக கிடைக்கும் ஒலி வாங்கியின் முன் இருந்து அவர் துரோகி இவர் துரோகி, நடைமுறைக்கு சாத்தியமில்லாத வெறும் வெற்று கோசங்களால் போடும் தனவந்த நபர்களினால் எதுவுமே சாதாரண மக்களுக்கு கிடைக்க போவதில்லை .
வன்னி தேர்தல் மாவட்டத்தில் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு அரசதரப்பு முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர் தெரிவாகி வருவது வழமை. காலம் காலமாக வன்னி மாவட்டத்துக்கு ஒரு யுத்த வலி சுமந்த தமிழ் அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்க மாட்டாரோ என்று நம்மில் பலர் ஏங்கியதுண்டு. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எந்த அரச தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் ஒரு தமிழ் அமைச்சர் ஆட்சியில் இருப்பார் (Doglus /Vijayakala /Ankayan )அரசதரப்பு, தமிழ் தேசிய தரப்பு என்று இரண்டிலுமே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் அபிவிருத்திகள் சிறந்தமுறையில் நடைபெறுகின்றது . மிகப்பெரிய அழிவுகளை சந்தித்த நாங்கள் இனியும் தொடருமானால் ஈழத் தமிழினம் உலகில் அழிவடைந்த இனங்களின் பட்டியலுக்குள் சென்று விடும். இதன் காரணமாக இன்றைய நிலையில் எங்கள் இருப்பை தக்க வைக்க வேண்டியவர்களாக உள்ளோம். வேறுபட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு சிந்தித்து செயற்பட வேண்டிய காலம். இன்றைய நிலமையை நன்கு யோசித்து முடிவெடுங்கள். உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவியல் ரீதியாக சிந்தித்து இந்த இக்கட்டான நிலையில் அண்ணன் உதயராசாவை வெற்றி பெற வைப்பதன் மூலம் ஓரளவேனும் எங்கள் கட்டுமானங்களை முன்னேற்றி அடுத்த கட்டத்துக்கு நகரலாம். வெற்றி படிகளில் ஏற்படும் தடை கற்களை தாண்டி இம்முறை அண்ணன் உதயராசா அணி வன்னியில் வரலாறு படைக்கும் . யாழ் மேட்டுக்குடி அரசியல் செயற்பாட்டில் மிதவாத தலைமைகளின் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளிலிருந்து தம்மை விடுவித்து வன்னிமைந்தனை தலைமையாகக் கொண்ட சிறிரெலோவை ஆதரித்து மெழுகுதிரியை ஒளிரவைப்போம்.

தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா?

(கே. சஞ்சயன்)

வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும் வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மக்களோடு மக்களாய்: தமிழர் சமூக ஜனநாயக கட்சி

வன்னி மக்களின் தொழில்வாய்ப்போடு கூடிய அபிவிருத்திக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி மெழுகுவர்த்தி சின்னமே ஒளிதரும்….. இலக்கம் …6.