ஏப்ரல் தாக்குதல்: சந்தேக நபராக மைத்திரிபால

ஏப்ரல்  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ​ஆதரவாக உண்ணாவிரதம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் இன்றைய தினம் (16) அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.

மக்களை அச்சுறுத்திய இராட்சத முதலை பிடிப்பட்டது

மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலாக இருந்த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு குமண காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

60இல் கட்டாய ஓய்வு: சுற்றறிக்கை வெளியானது

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக வரையறுப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை அமல்படுத்தும் சுற்றறிக்கை, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சினால், இன்று (14) வௌியிடப்பட்டது.

முன்னேற்றம் இல்லை: இந்தியா கவலை

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கான அர்ப்பணிப்பில் இலங்கை அரசாங்கத்தினால் அளவிடக்கூடிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாமை குறித்து இந்தியா, இன்று (12) ஜெனீவாவில் கவலை தெரிவித்தது.

மோசமானவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பது ஏன்?

(என். கே அஷோக்பரன்)

கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியாக 316,544 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியவர் பிரசன்ன ரணதுங்க. ‘நல்லாட்சி அரசாங்கம்’ அமைந்த 2015 பொதுத் தேர்தலில் கூட, கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளாக 384,448 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவர் பிரசன்ன ரணதுங்க. அன்று கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சியாக அமைந்த ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் முதலிடம் பிடித்த ரஞ்சன் ராமநாயக்க பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் 216,463 தான்! 

Z – score எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?

Z score என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகின்றது? என்ற விடயத்தில் பலவிதமான சந்தேகங்களை உயர் தரம் கற்கின்ற பல மாணவர்களிடமும் காணமுடிகின்றது.

வெளிநாடுகளுக்கு பறக்கும் இலங்கையர்கள்

வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக குறித்த பணியகம் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா   ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்றும், அவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கு மேல் என்றார்.

செயலிழந்த புழுதியாறு குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம்

கிளிநொச்சி – மாயவனுார், புழுதியாறு குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் 32 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த 08 ஆண்டுகளுக்கு மேலாக செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

போராட்டக்காரர்கள் பழிவாங்கப்படுகின்றனர் : சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அதிகாரிகள் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை மிக மோசமாக சித்தரிப்பதாக  சர்வதேச மன்னிப்புச் சபை  வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.