ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்புக்காக நியாயப்படுத்தும் சமீபத்திய G7 அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார், மேலும் இந்த தாக்குதல் அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் போது நடந்ததாகவும், அதை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Month: June 2025
கெஹெலிய குடும்பம் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் ரம்புக்வெல்ல மற்றும் மகள் சந்துலா ரம்புக்வெல்ல ஆகியோர் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலங்களை பதிவு செய்ய அழைக்கப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம்
“வடக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வதந்தி”
வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபைக்கு வந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சற்றுமுன்னர் சபைக்கு வருகைதந்தார். பாராளுமன்றத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சி தற்போது சபை அமர்வுகளை புறக்கணிக்கிறது, அந்த நேரத்தில் ஜனாதிபதியின் பிரசன்னம் சிறப்பு வாய்ந்தது