முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்ய சட்டமூலம்

1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை மட்டுப்படுத்த 02 வரைவு சட்டமூலங்களை வகுக்க சட்ட வரைவாளர்களுக்கு அறிவுறுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

யாழில்.போதைப் பொருட்களுடன் நால்வர் கைது

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்

2024 அரையாண்டு சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய, இலங்கையில் 2.7 மில்லியன் பேர் முதியோர் சமூகத்தவராவர். 2052 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் 60 வயதைக் கடந்தவர்களின் சனத்தொகை 24.8மூ சதவீதம் வரை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அலுவலகம் ஊகித்துள்ளது.

இலங்கையில் திடீர் விமான விபத்துக்களை புலனாய்வு செய்யும் பணியகம்

2002 ஆம் ஆண்டின் 34 ஆம்இலக்க இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை வான்பரப்புக்குள் இடம்பெறுகின்ற விமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்களை புலனாய்வு செய்யும் பொறுப்பு அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மண்டை தீவு கொலைகளுக்கு டக்ளஸ் உடந்தை

மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என பாராளுமன்றத்தில் இன்று (17) குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கோரினார். 

ஜனாதிபதி மன்னிப்பு பெறாத கைதிகளை விடுவித்த செயல்

கைதிகள் குழுவிற்கு சமீபத்திய வெசாக் பண்டிகையின்போது வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், ஜனாதிபதி மன்னிப்பு பெறாத கைதிகள் குழுவும் முன்னறிவிப்பின்றி விடுவிக்கப்பட்டனர், 

கொழும்பு மாநகரம் NPP வசம்: மேயராக வ்ரே காலி பல்தசார் தெரிவு

இன்று திங்கட்கிழமை (16) காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) வ்ரே காலி பல்தசார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 61 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மேயர் வேட்பாளர் ரிசா சாரூக் 54 வாக்குகளைப் பெற்றார்.

இஸ்ரேல் போர் சூழல்

இப்பொழுது தொலைக்காட்சியில் “France 24” பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேர்காணல் நிகழ்வில் முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் Ehud Olmert, பெஞ்சமின் நத்தனியாகுவைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டு ஒதுக்கீடு 1.4 பில்லியன் டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளது

‘இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் அறிக்கையிடல் குறித்து FactCheck.lk இன் கவலைகள்’எனும் புதிய விளக்கக்குறிப்பின் படி,இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களிற்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று காலை இடம்பெற்றது.