சீமெந்து விலை அதிகரிப்பு?

50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் மொத்த விலை 100 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் பொது நூலகம்: டிஜிட்டல் மயமாக்கல் செயல் திட்டம் விரைவில்

நூலக நிறுவனமும் யாழ்ப்பாணம் பொது நூலகமும் இணைந்து  டிஜிட்டல் மயமாக்கல் செயல்திட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல் சனிக்கிழமை( 07) அன்று  நடைபெற்றது.

”விதிகளை மீறியவர்களுக்கு எதிராக சட்டம் பாயும்“

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில்  சனிக்கிழமை (07) அன்று  புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று   தலைக்கவசம் இன்றியும்  சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட  பொது  போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில்  மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதை ஓட்டிய சந்தேக நபர்களை பொலிஸார் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மன்னார்: சிந்துஜா,வேனுஜாவின் மரணத்திற்கு நீதி கோரிய மூவர் கைது

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் மன்னார் பொலிஸாரால்   ஞாயிற்றுக்கிழமை(8) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெக்கோ கிளி திருடப்பட்டது

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று கடந்த 4ஆம் திகதி இரவு திருடப்பட்டுள்ளது. 

323 கொள்கலன்கள் விவகாரம்;இலங்கை சுங்கம் விளக்கம்

சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல் கொள்கலன்களில் ஆயுதங்கள், போதைப்பொருள் அல்லது தங்கம் இருந்ததாகக் கூறப்படும் கூற்றுகளை இலங்கை சுங்கம் நிராகரித்ததுடன், இறக்குமதியாளர்களால் அறிவிக்கப்பட்ட தொழில்சார் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு மட்டுமே சரக்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதை சுங்கம் உறுதிப்படுத்தியது.

ஜனாதிபதி மன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டது:சிஐடி

2025 வெசாக் காலத்தில் பல கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த விசாரணையில், இந்த ஆண்டு வெசாக்கிற்கான ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்தை குறைக்கும் அரவணைப்பு

சீனாவில், இளம் பெண்கள் ஆண்களை 5 நிமிடம் கட்டிப்பிடிப்பதற்கு 50 யுவான் (இலங்கை மதிப்பில் 2080.38 ரூபாய்) செலுத்தும் புதிய டிரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதற்காக அங்கு பிரத்யேக செயலிகள் இயங்கி வருகின்றன. இதில் பெண்கள் கட்டிப்பிடிக்க விரும்பும் ஆண்களை முன்பதிவு செய்து கொள்கின்றனர்.

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள மனித புதைகுழியின் பரீட்சார்த்த அகழ்வு பணிகள், ஞாயிற்றுக்கிழமையுடுன் (08)நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில்,  இதுவரை 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன,

”வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை லாபம் ஈட்டுகிறது”

வாழைச்சேனையின் ஒரு காலத்தில் செயலிழந்த காகிதத் தொழிற்சாலை இப்போது லாபத்தில் இயங்கி வருவதாகவும், அதன் நீண்டகால கடன்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.