’திட்டமிட்ட காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யவும்’

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு  அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வு

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

’பிரபாகரனின் ஆயுத விவகாரம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு’

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில்   விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில்  கூறியது ஆதாரமற்றது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா தெரிவித்துள்ளார். 

சிறீலங்கன் எயர் லைன் இன் கடன்

(Mohamed Ali Yaseer)

சிறீலங்கனின் தற்போதைய மொத்த கடன் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இது இவ்வளவு காலமும் வாங்கிய கடன் மற்றும் வட்டி.

இலாப நஷ்டம் அது வேறு கணக்கு

பிரதமர் ஹரிணியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் மகிழ்ச்சியான ஈதுல் அல்ஹா பெருநாளாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கைதிகள் விடுதலையில் சர்ச்சை : ஜனாதிபதி செயலகம் அறிக்கை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய பெண் கைது

கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்காக அழகு நிலைய ஊழியரான 24 வயதுடைய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக வதுரம்ப பொலிஸார் தெரிவித்தனர்.

சுத்தம் பேணப்படாத காரணத்தால் 5 வருட சிறை

மன்னார் சாவற்கட்டு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு  மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று (05) ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83,000  ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

மன்னார் நகர சபை பொது சுகாதார  பரிசோதகரினால் குறித்த உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது,

தலையுறை பயன்படுத்தாமை, மருத்துவ அனுமதி பெறாமை, உணவுகளை ஒழுங்கற்ற முறையில் களஞ்சியப்படுத்தியமை, கழிவுநீர் தொட்டியை உரிய முறையில் பேணாமை, சுத்தம் பேணப்படாமை போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு  நேற்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உணவகத்தில் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் அதே நேரம் உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டது.

தயாசிறி விவகாரம்: விலகினார் கயந்த

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மே 20 அன்று சபையில் நடந்து கொண்ட விதம் குறித்து பெறப்பட்ட புகாரை விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் கயந்த கருணாதிலக்க விலகிக்கொண்டார்.

செம்மணி: கைக்குழந்தைகளின் எலும்பு கூடுகளும் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணியில்   கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று  எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.