சுதந்திரமாக கல்வி பெற முடியாவிடின் அது ஒரு தேசிய சோகம்

பல்கலைக்கழகங்களில் கொடுமைப்படுத்துதல் சமீப காலங்களில் ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் சிறிய உடல் ரீதியான துஷ்பிரயோகமாக இருந்த கொடுமைப்படுத்துதல், இப்போது வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் மரணம் என அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

”250 ரூபாய்க்கு உப்பு விற்க முயற்சிக்க வேண்டாம்”

இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உப்பை அதிக விலைக்கு விற்க முயற்சித்தால், இந்த வாரத்திற்குள் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். 

பேருந்துகளைக் கண்காணிக்க AI சாதனங்கள்

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கட்டுப்படுத்தப்படும் சாதனங்கள் நிறுவப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

ரூ.99.3 மில்லியன் மோசடி; 3 பெண் அதிகாரிகள் கைது

99.3 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வாழைச்சேனை மீனவர்களால் தாக்குதல்: புல்மோட்டையில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை, திருக்கடலூர் மீனவர் வாழைச்சேனை மீனவர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும்,தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தும் திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியை மறித்து மீனவர்கள், வியாழக்கிழமை (05) காலை 8 மணி முதல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சித்த மருத்துவத்தில் முதல் பேராசிரியர் நியமனம்

இலங்கையின் சித்த மருத்துவ வரலாற்றில் முக்கியமான மருத்துவர். நா.வர்ண குலேந்திரன் அவர்களை, சித்த மருத்துவத்தில் இலங்கையின் முதல் பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை மற்றும் பேரவை கூட்டத்தின் முடிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் 900 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக நீர்ப்பாசனத்தின் மகிமையை நமது உரிமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சிந்தனையில் வியாழக்கிழமை (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துன்னாலையில் 15 லீற்றர் கசிப்பு மீட்பு

யாழ். வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் 15 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை எடுத்துச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளார்.

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

கொழும்பு தாமரை கோபுரத்தின் தரை தளத்தில் உள்ள கடை உரிமையாளருக்கு, அதிகபட்ச சில்லறை விலையான ரூ.80 ஐ விட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றதற்காக கொழும்பு மேலதிக நீதவான் ரூ.100,000 அபராதம் விதித்துள்ளார்.

மக்களே! உங்களுக்குத் தெரியுமா?

கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள சந்தேக நபரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால்   பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.