இலங்கையில் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்

அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தில் திருத்தம்?

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சமிக்ஞையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச்சூடு

இரத்மலானை – கொளுமடம சந்தியில், வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டார். பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய. இடத்திற்கு மாற்றக்கோரி பருத்தித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை வெள்ளிக்கிழமை (24)  காலை 9:00. மணியளவில் முன்னெடுத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது ஒரு தீவிர பிரச்சினையாக கருதப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். 

பாதாள அரசியல்வாதிகள் யார்? விரைவில் அம்பலம்

பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள  மற்றும்  தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெகுவிரைவில் சபைக்கு அறிவிப்பார் என அரச தரப்பு  பிரதம கொறடாவும் அமைச்சருமான  நலிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

செவ்வந்திக்கு படகு வழங்கிய ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு

திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியத் தலையீடா?

(முருகானந்தன் தவம்)

2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும்  திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதாக அறிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.(தேசிய மக்கள் சக்தி) அரசு, அதனடிப்படையில்  இரண்டு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்துள்ளதுடன், புதிய அமைச்சர் ஒருவரையும், புதிதாக 5 பிரதி அமைச்சர்களையும் நியமித்துள்ளது.

வாசிப்பின் ஊடாக நவீன சமூகத்தை உருவாக்குவோம்

ஒக்டோபர் மாதம் இலங்கையில் தேசிய வாசிப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த மாதம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும், போட்டிகளையும் நடத்துவதன் மூலம் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் வாசிப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை முறையை ஒழுங்கமைக்கவும்

முழு வளிமண்டல மற்றும் வானிலை நிலைமைகளும் சீர்குலைந்துள்ளன. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைக்கால வானிலை வெள்ளம், மண்சரிவு போன்ற நிலைமைகளை உருவாக்கியுள்ளது.