கனடா பொருட்கள் மீது 10% வரி ட்ரம்ப் அறிவிப்பு

ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, இந்தியா, சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளார். 

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது – டிரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்த போரை ஊக்குவிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை இடையே கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஒக்டோபர் 2023 இல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை, நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை பயணிகளை ஏற்றிச் செல்கிறது.

மதுபோதையில் யாழ்தேவியை ஓட்டிய நடத்துனர் கைது

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் யாழ்தேவி விரைவு ரயிலின் தலைமை நடத்துனர் சனிக்கிழமை (25) மாலை அனுராதபுரம் ரயில் நிலையத்தில் மது போதையில் பணியில் இருந்தபோது ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அனுராதபுரம் காவல்துறையிடம் அவரை ஒப்படைத்த பிறகு, நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அனுராதபுரம் காவல்துறை தெரிவித்துள்ளது. வேறொரு நடத்துனர் பணியமர்த்தப்பட்ட பின்னர் யாழ்தேவி ரயிலை கொழும்பு நோக்கி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு கூறுகிறது.

”போதைப்பொருள் ஒழிப்புக்கு பொலிஸ் மட்டும் போதாது”

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு பொலிஸ் நடவடிக்கை மட்டும் போதாது என்று கூறிய அமைச்சர் விஜித ஹேரத், கிராம மட்டத்தில் உள்ள சமூகங்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் நுகர்வைத் தடுக்க தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் நடைபெற்ற சிவில் சமூகத் தலைவர்களுடனான சமீபத்திய கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

12 வயதுக்குட்பட்டவர்கள் போன் பயன்படுத்த விரைவில் தடை

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார்.

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் திரு. லசந்த விக்ரமசேகரவின் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். 

ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு தப்பினார்: முன்னாள் சிஐஏ அதிகாரி

ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.

அதிகார பகிர்வும் அதிகார சபையும். உள்ளகப் பொறிமுறையும் அதிகாரசபையும்

(மல்லியப்புசந்தி திலகர்)

ஓர் அரசியல் உரையாடல்
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுடன் இன்றைய காலைப் பொழுதில் ஓர் உரையாடல் இடம்பெற்றது.

ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!

(இராமானுஜம் நிர்ஷன்)

பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன். நான் இங்கு யாரையும் குறை கூறவில்லை. கீழே வாசித்து பாருங்கள்.