பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு ஆர்வத்துடன் முன்வரும் உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகளுக்கும், அமைப்புகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

The Formula
இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவி வழங்குவதற்காக ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திலிருந்து நிவாரண பொருட்களுடனான விமானமொன்று செவ்வாய்க்கிழமை (02) அன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.
கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, செவ்வாய்க்கிழமை (02) அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (02) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
நாட்டின் சீரற்ற வானிலை காரனமாக பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு வீதியில் காணப்பட்ட மண்மேடுகள் அகற்றப்பட்டுள்ளதுடன் சீர் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹட்டன் – கண்டி பஸ் போக்குவரத்தை தவிர, ஏனைய இடங்களுக்கான பஸ் பயணம் ஹட்டனிலிருந்து இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த திட்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட இழப்பீட்டு செயல்முறையை செயல்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கட்டாய காப்பீடுடன் தொடர்பான பயிர்களான நெல், சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயாபீன் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடவும், இழப்பீடு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.