மகாவலி நதி பெருக்கெடுத்ததால், வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கின, அதே நேரத்தில் ஈச்சலம்பட்டு பிரதேச மருத்துவமனையும் முற்றிலுமாக நீரில் மூழ்கியது.
Month: December 2025
ஆபத்தான மரங்களா? அறிவியுங்கள்
தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை
ரூ.100 இலட்சம் நன்கொடை வழங்கிய ’தாவூதி போரா’ சமூகம்
உ/த பரீட்சை ஜனவரி ஆரம்பம்
க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார். தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்து திட்டமிடப்பட்ட தேர்வுகளையும் கல்வி அமைச்சு முன்னதாக காலவரையின்றி ஒத்திவைத்தது.
குல சாமியடா நீ…
(தோழர் ஜேம்ஸ்)

துப்பாக்கி எடுக்கவில்லை
துடுப்புடன் போனாய்
வெ(கொ)ல்லப் போகவில்லை
மீட்டிடப் போனாய்
தரையில் போகவில்லை
கரைசேர்க்க போனாய்
வெஞ்சினத்துடன் போவில்லை
வெள்ளத்திற்குள் போனாய்
மகனே எங்கே புதைந்தாய்…?
சமுத்திரம்தான் விழுங்கியதோ….?
துப்பாக்கியுடன் போய் இருந்தால்….?
மரணப் பெட்டியிற்குள் வருவாய் என்று
மனதை ஆற்றுப்படுத்தி இருப்பேன்
நீ துடுப்புடன்தான் போனாய்
துப்பாக்கியை தூர எறிந்துவிட்டு
காப்பாற்றி கரையேற்றி
கடமை முடிய வருவாய்…
காத்திருந்தேன்
பாற் சோறு உனக்கு ஊட்ட
நீ கரையேறாது…?
மக்களை கரையேற்றி
நீரில் கரைந்தது ஏனோ..?
சேற்றில் புதைந்தது தானோ…?
கரைக்கப்பட்டவன் நீ
துரத்தப்பட்டவன் அல்ல
விதைக்கப்படவன் நீ
புதைக்கப்பட்டவன் அல்ல.
உன் அருகில்
தமிழ் சகோதரனும்
புதைக்கப்பட்டிருப்பான்…?
அவன் கரம் கொடுப்பான்
உனக்கு
அதனால்
எனக்கு மட்டும் அல்ல
எங்களுக்கு மட்டும் அல்ல
எல்லோருக்கும்
குல சாமி ஆகிவிட்டாய்
இங்கு புத்தனும்… முருகனும்….
அல்லாவும்… யேசுவும்….
உன்னை விஞ்சும்
சாமி ஆகிவிடுவார்களோ…?
நீதான் ஈழத்து குல சாமியாடா!
மழை புயல் அனர்த்தங்களில் தம்முயிரை அர்பணித்த வீரர்களுக்கு சமர்பணம்.
(மீட்புப் பணியில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் சிலர் மரணம் – செய்தி)
(Sri Lanka’s navy has confirmed that all five personnel who went missing during a flood-mitigation operation in Chundikkulam have died, as search teams recovered their bodies. Police said the sailors had been working earlier today to widen a waterway in the Chundikkulam area when they were swept away. – News)
அதற்கு தாயின் புலம்பலாக என் மனதில் உதித்த வரிகள் இவை)
வரைபடங்களும் மனிதர்களும் !
(Ravindran Pa)
//ட்றம்பின் ஆலோசகர்கள் 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன்-ரசியா இடையில் முன்வைத்திருக்கிறார்கள். போரில் வெற்றிக்கு அருகாக வந்திருக்கும் ரசியாவுக்கும் தோல்வியை தழுவும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சமச்சீரற்றதாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார்.


