வவுனியாவில் விகாரை அமைக்கும் பணி தீவிரம்

வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது. 

போதைப்பொருட்களுடன் நால்வர் யாழில் கைது

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று  கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பேர் போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடலில் மூ​ழ்கிய வெளிநாட்டவர் இருவர் மீட்பு

ஹிக்கடுவ கடற்கரையில் நீச்சலடிக்கச் சென்ற வெளிநாட்டு தம்பதியினர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையில் இருந்த காவல்துறை உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் தம்பதியினரை மீட்டனர். அதன்பின்னர்  அவர்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தனர். மீட்கப்பட்ட இருவரும் 23 மற்றும் 20 வயதுடைய பெலாரஷ்  தம்பதியினர்.

சொத்து சேகரித்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் விசாரணை

தற்போதைய அரசாங்கத்தின் 06 அமைச்சர்களுக்கு எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை தொடங்க இஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக சிங்கள இணைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவசரகால நிலை நீடிப்பு

இலங்கையில் அமுலிலுள்ள பொது அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியின் செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இராட்சத முதலை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மனிதர்களையும் ,விலங்குகள்,பறவைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டி வந்த இராட்சத முதலை இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது.

அக்கரைப்பற்று விபத்தில் 12 பேர் காயம்

அக்கரைப்பற்றுவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசு பயணிகள் பேருந்து இன்று (25) காலை சோமாவதி சாலை டி-சந்திப்பில் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்ததாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தின் விளிம்பில் இருக்கும் பாடசாலைகள் குறித்து உடனடி நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பல பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

இலங்கையில் வாகன விற்பனையில் மாற்றம்

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.