கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 7 பௌத்த துறவிகள் மரணம்

குருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மதகுருமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய துறவிகளும், கம்போடிய துறவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.