இந்தோனேசிய விமானம் மாயம்

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு இன்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.