வீதியை மீளத் திறக்க கோரி கையெழுத்து வேட்டை

புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைக்கும் பாரம்பரியமான எளுவன்குளம் மற்றும் மரிச்சிக்கட்டி இடையே செல்கின்ற புத்தளம்-மன்னார் (B-379) வீதியை மக்களின் பாவனைக்காக உடனடியாக மீளத் திறக்க வலியுறுத்தி ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான ஒரு இலட்சம் கையொப்பங்களை திரட்டும் மாபெரும் கையெழுத்து வேட்டை வெள்ளிக்கிழமை (23) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.