அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாமீது 100 சதவீதம் வரி விதிக்கப்போவதாய் மிரட்டியிருக்கிறார். சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டால் வரி உடனடியாக விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். சீனா, கனடாவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.