அரசாங்கப் பாடசாலைகளின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகத் தமது கடமைகளை வகிக்கும் பிரதமர், இந்தப் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.