இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மனியில் முதல்முறையாக அதி வலதுசாரி மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாசாக்கற்ற, தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்புக் கட்சியான ‘மாற்றுக்கான ஜெர்மனி’ (Alternative für Deutschland – AfD) கட்சி, முக்கியமான மாநிலத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனினும், அக்கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது.