சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக புதன்கிழமை (07.10.2026) முதல் 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில், காலை 9:00 மணி வரை மாத்திரம் பேருந்து சேவைகள் வழமைபோன்று பாலத்தினூடே இடம்பெறும். அதன் பின்னர், மாற்று வழித்தடத்தின் ஊடாகப் பேருந்து சேவைகள் தொடரும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.