கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம்.
முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம். அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். (“விழாவில் கலந்து கொள்ள வைரமுத்துவின் நிபந்தனை” தொடர்ந்து வாசிக்க…)
Author: ஆசிரியர்
ஒன்று கூடிய முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்!! யாழ் நகரில் கோலாகல விருந்து!!
முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள்(05/03/2018) விழாவிற்கு முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த நபர் தற்போது புளொட் அமைப்பின் முக்கியஸ்தராகியுள்ளார்.அவ்வகையில் ஒட்டுக்குழு புளொட் தலைவர் த.சித்தார்த்தன், மத்திய குழு உறுப்பினரும், மாமனிதர் சிவராம் கொலை முக்கிய சூத்திரதாரியுமான ஆர்.ஆர் எனப்படும் இராகவன் அவ்வமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர்.இதேவேளை பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துள்ளனர். சுரேஸ்பிறேமசந்திரன், வரதராஜாப்பெருமாள்சுகு மற்றும் முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய ஈ.பி.டி.பி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா,அதிலிருந்து வெளியேறிய வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா என அனைவரும் வருகை தந்திருந்தனர்.இதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான பசீர் காக்கா போன்றவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
துமிந்தவின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அதனை நிறைவேற்றுமாறு இன்று (11), உத்தரவிட்டுள்ளது.
(“துமிந்தவின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)
நமது மலையகம்
அரங்கம் பத்திரிகையின் இணைப்பு
மரண அறிவித்தல்
எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த… (Part 8)
இலங்கை விமான நிலையத்தில் இறங்கி யாழ் நோக்கிய பிறந்த மண்ணுக்கான பயணத்தில் வவுனியா வரைக்கும் கிலோ மீற்றர் ஒன்றிற்கு நாலு ஐந்து என்று வீதி ஓரக் கடைகளை காணமுடியும் இது இளநீரில் ஆரம்பித்து ரம்புட்டான் மங்குஸ்தான் , கொய்யா பழ வகைகள் என்று விரிந்து மண்சட்டியில் சூட்டடுப்பில் சமைத்த சுவையான சாப்பாடு என்று விரிந்திருக்கும். எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை தரித்து தேவையானவற்றை வாங்கி சாப்பிடலாம். சுவையாக மட்டும் அல்ல சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தன. எங்கும் அப்பம் கட்டுச்சம்பல் இஞ்சி பிளேன் ரீ. ஆனால் இன்னமும் ரொய்லெர் மாத்திரம் தேவையான தரத்திற்கு வளர்ச்சியடையவில்லை என்பது ஒரு மிகப் பெரிய குறையே. வவுனியா தாண்டியதும் இந்த வீதியோரக் கடைகளை காணமுடியாது?. சிங்கள மக்களின் இந்த சிறிய தொழில் முயற்சிகள் தமிழ் பகுதிகளில் இல்லை. நான் குறிப்பிடுவது நிரந்தரக் கடைகளை அல்ல. இளநீர் கடைகள் போன்றவற்றை. இயக்கச்சி தாண்ட மிகக் குறைவாகவேனும் ஒன்று இரண்டு என்று தமது வீடுகளில் உற்பத்தியாகும் பழம் இளநீரை. நுங்கு என்பன காணக்கிடைத்தன.
(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த… (Part 8)” தொடர்ந்து வாசிக்க…)
விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு
(புருஜோத்தமன் தங்கமயில்)
வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. (“விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு” தொடர்ந்து வாசிக்க…)
வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’
(Gopikrishna Kanagalingam)
உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது. போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
(“வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’” தொடர்ந்து வாசிக்க…)
Rupee crisis mainly due to internal problems – DEW
General Secretary of the Communist Party Dew Gunasekara at a Seminar on ‘the Economic Crisis in Sri Lanka’ held at the Sujeewa Hall in Matara last weekend flayed the government for trying to shirk the responsibility for the current economic crisis.
(“Rupee crisis mainly due to internal problems – DEW” தொடர்ந்து வாசிக்க…)