புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் 

ஊருக்கு நூறு பேர்.இது ஜெயகாந்தனின் நாவல்.

ஒருவன் நக்கல்பாரி இயக்கத்தில் பயிற்சி பெற செல்கிறார்.அவரை ஆயுதங்கள் சகிதம் சிலர் வந்து வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.பயிற்சிக்காக செல்பவர் கொஞ்சம் யோசித்துவிட்டு நீங்கள் என்னை கடத்திச் செல்வது போல உணர்கிறேன் என்றார்.அதைக் கேட்ட மற்ற தோழர்கள் சிரித்துவிட்டு ஒருவர் தனது துப்பாக்கியை பயிற்சிக்கு வந்தவரிடம் கொடுத்தார்.அவரும் வாங்கிப் பார்த்தார்.அவரையே வைத்திருக்கும்படி கூறுகிறார்கள்.அவரும் புன்னகையோடு வைத்திருக்கிறார்.வாகனம் தொடர்ந்து பயணிக்கிறது.இப்போது தோழர்கள் கேட்டார்கள்.இப்போது எப்படி உணருகிறீர்கள்.என் தோழர்களோடு தோழர்களோடு தோழர்களாக பயணிக்கிறேன் என்றார்.

(“புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் ” தொடர்ந்து வாசிக்க…)

நந்திக் கடல் அருகே

இழந்து இழந்து

பின்வாங்கிப் பின்வாங்கி
இழுத்துவந்தீர்கள் இங்கு 
நந்திக் கடலருகே
நான்கு லட்சம் பேர் நாங்கள்

(“நந்திக் கடல் அருகே” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடக வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? சாதக பாதகங்கள் என்ன?- ஓர் அலசல்

 

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலை தனது பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் நாளை எப்படி சட்டப்பேரவை நடக்கும் எப்படி வாக்கெடுப்பு நடக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்.

(“கர்நாடக வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? சாதக பாதகங்கள் என்ன?- ஓர் அலசல்” தொடர்ந்து வாசிக்க…)

தொடங்கியது குதிரை பேரம்: எம்எல்ஏக்களுக்கு ரூ.150 கோடி வலைவிரித்த ஜனார்த்தன ரெட்டி: ஆடியோ வெளியிட்டு காங்கிரஸ் புகார்

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம், பதவி சலுகைகளைக் கூறும் பாஜகவின் ஜனார்த்தன ரெட்டியின் ஆடியோ டேப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

(“தொடங்கியது குதிரை பேரம்: எம்எல்ஏக்களுக்கு ரூ.150 கோடி வலைவிரித்த ஜனார்த்தன ரெட்டி: ஆடியோ வெளியிட்டு காங்கிரஸ் புகார்” தொடர்ந்து வாசிக்க…)

அறமற்ற முறையில் அதிகாரத்தைப் பறிக்கிறது பாஜக; பாஜகவின் பணிவான ஊழியர் கர்நாடக ஆளுநர்: சிவசேனா விளாசல்

பாஜகவின் பணிவான ஊழியர் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா. மோடிக்கு விசுவாசமாகச் செயல்படுவதால்தான், பாஜகவைப் பதவி ஏற்க அழைத்துள்ளார். அறமற்ற வழியில் அதிகாரத்தைப் பறிப்பதுதான் பாஜகவின் புதிய கொள்கையா என்று சிவசேனா கட்சி கேள்விகளால் விளாசியுள்ளது.

(“அறமற்ற முறையில் அதிகாரத்தைப் பறிக்கிறது பாஜக; பாஜகவின் பணிவான ஊழியர் கர்நாடக ஆளுநர்: சிவசேனா விளாசல்” தொடர்ந்து வாசிக்க…)

போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.

இது யாரால் ஏற்பட்டது ? சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின் இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி, பிரேமதாசா உட்பட,  பத்மநாபா, அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்  புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே  செத்துவிட்டார்கள்.

(“போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

ராகுலுக்கு கைகொடுத்த சமூக நீதியும், கைகொடுக்காத‌ சாஃப்ட் இந்துத்துவாவும்!

(இரா.வினோத்)

காங்கிரஸ் தேசிய‌த் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக தேர்தலில் சமூக நீதி, சாஃப்ட் இந்துத்துவா இரண்டையும் கூட்டி ‘வெற்றி’க் கணக்கு போட்டார். குஜராத் தேர்தலின்போது பின்பற்றிய அதே ‘ஆலய தரிசனம்’ பாணியை கொஞ்சம் மாற்றி, கர்நாடகாவில் இந்து கோயில்கள் மட்டுமல்லாமல் மற்ற மத வழிபாட்டுத் தளங்களும் படையெடுத்தார். கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்து, ஒல்லிகர், பிராமணர் உள்ளிட்ட சாதிகளின் மடங்களுக்கும் சென்று ஆசிபெற்றார். ஆனால் ராகுல் போட்ட கணக்கு தேர்தலில் பலிக்காமல் போய்விட்டது.

(“ராகுலுக்கு கைகொடுத்த சமூக நீதியும், கைகொடுக்காத‌ சாஃப்ட் இந்துத்துவாவும்!” தொடர்ந்து வாசிக்க…)

ஈரான்: சூழும் போர்மேகங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரின் அவலம் சொல்லி மாளாதது. ஆனால், போர்கள் இன்றிய காலமொன்றை வரலாற்றில் காணவியலாது. இன்று, போர்கள் பலரின் சீவனோபாயமாகி விட்டன. ஆயுத விற்பனை ஒருபுறமும், அதிகாரத்துக்கான ஆவல் மறுபுறமும் எனப் போர்கள் இன்று தவிர்க்க இயலாதனவாகி விட்டன. போர்கள் பற்றிய அறிக்கையிடல்களும் அதன் அவலத்தையன்றி, நவீன தொழில்நுட்பத்தையும் வெற்றியாளர் யார் என்பதையும் தெரிவிக்கும் தன்மையுடையனவாய் மாறிவிட்டன.

(“ஈரான்: சூழும் போர்மேகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இராக்கின் புனித நகரில் முதல் முறையாக ‘சமூக நீதி’ கோரும் 2 பெண் கம்யூனிஸ்ட்கள் வெற்றி

இராக் அரசியல் சூழல் பற்றிய குப்பைவாத புரிதல்களைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இராக் தேர்தலில் அதன் புனித நகரில் 2 பெண்கள், அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிப் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள வரலாறு காணாத வெற்றி அக்கட்சியின் சார்பில் 2 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

(“இராக்கின் புனித நகரில் முதல் முறையாக ‘சமூக நீதி’ கோரும் 2 பெண் கம்யூனிஸ்ட்கள் வெற்றி” தொடர்ந்து வாசிக்க…)

ஆளுநர் அழைப்பு விடுத்தார்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9.30 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

(“ஆளுநர் அழைப்பு விடுத்தார்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்” தொடர்ந்து வாசிக்க…)