உண்மைகளை உரத்துப் பேசும் இந்திய அரசியல் களம்

(Rathan Chandrasekar)

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழகச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
காங்கிரஸ் ஊடகப்பிரிவுத்தலைவர் கோபண்ணா முன்னிலையில்….
புதிய நாடாளுமன்றத் திறப்பு விவகாரத்தில், குடியரசுத்தலைவரைப் புறக்கணித்த மோடி அரசு-

ஆஸாத்தின் மீள் பிரவேசம்!

(Maniam Shanmugam)

ஈராக்கிலும், லிபியாவிலும் ஆட்சியிலிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கங்களைக் கவிழ்த்து, அந்த நாடுகளின் தலைவர்களான சதாம் ஹூசைன் மற்றும் கேணல் கடாபி போன்றேரைக் கொலை செய்த மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள், அந்த நாடுகளை சீரழித்து இன்று ஸ்திரமற்ற நிலையில் வைத்துள்ளன.

ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 24

உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல!  ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை. 

லடாக் : சுதந்திர போராட்டத்தின் சுருக்கமான கதை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு 2019ம் ஆண்டு முடிவு செய்தது.

இலத்தீன் அமெரிக்க அதிவலது: கெடுபிடிப்போரில் அறுவடை செய்தல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வலது தீவிரவாதத்தின் நிழலில் – 22

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலத்தீன் அமெரிக்க அதிவலதின் இருப்புக்கு 1930களில் ஸ்பெயினில் சர்வாதிகாரி ஃபிராங்கோவின் எழுச்சி முக்கிய உந்து சக்தியாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பாதியில் நவீனமயமாக்கல், அதிவலதுக்கு நெருக்கடியை உருவாக்கியது. 

வாழைப்பழ அரசியல் (பகுதி-3)

(Ravindran Pa)

1928 பனிக்காலம். கொலம்பிய நகரமானCiénaga இல் வாழைப்பழ உற்பத்தித் தொழிலாளர்கள் தமது வாழ்வாதார தேவைகளையும், சம்பள உயர்வையும் கோரி பெரும் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். ஒன்றும் விசேடமான கோரிக்கைகள் அல்ல இவை. இருந்தபோதும் டிசம்பர் 6ம் தேதி அவர்கள் திரண்டிருந்த கூட்டமொன்றில், தொழிற்சங்க தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, கொலம்பிய இராணுவம் பெரும் படுகொலையை நிகழ்த்தியது. இதில் இரண்டாயிரம் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ரஷ்யா-உக்ரைன் மோதல் ஒரு வருடப் பூர்த்தி

‘அன்பான ரஷ்ய மக்களே,

ஒரு கடினமான நேரத்தில் இன்றைய இந்த உரையை நான் நிகழ்த்துகிறேன்-இதனை நாங்கள் அனைவரும் நன்கு அறிவோம்-இன்றைய காலகட்டமானது, முழு உலகிலும் தீவிரமான, மீளமுடியாத மாற்றத்திற்கும், எமது நாட்டின் மற்றும் எமது மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளிற்கும், நாங்கள் ஒவ்வொருவரும் மகத்தான பொறுப்பை ஏற்பதற்குமான காலகட்டமாகும்.

நேட்டோவில் புதிய நாடுகளின் இணைப்பு புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்துமா…?

(சாகரன்)


2295 கிலோ மீற்றர் (தரை வழியே 1974 கிலோ மீற்றர் நீர் வழியாக 321 கிலோ மீற்றர்) தூரத்திற்கு ரஷயாவின் எல்லையில் அமெரிக்க நேட்டோ படைகளை நிறுத்தி ரஷ்யாவின் இருப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நேட்டோவுடனான இணைவு வேண்டாம் என்பதை மீறிச் செயற்பட முனைந்ததே உக்ரேன் ரஷ்யா யுத்தம்..

சீனாவும் அருணாச்சல பிரதேச ஆக்கிரமிப்பும்

இந்தியாவின் வட கிழக்கே உள்ள கடைசி மாநிலம் தான் அருணாச்சல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கிறது. இந்த புவியியல் ரீதியலான சூழலை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா,  அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.  அருணாச்சல பிரதேசத்தை ‘தென் திபெத்’ என்று அழைத்து வருவதோடு, அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை  தனது பகுதி என்றும் உரிமை கொண்டாடி வருகிறது.

இருபதாம் நூற்றாண்டின் நெருக்கடி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 21:

கடந்தவாரம், இலத்தின் அமெரிக்காவில் அதிவலது தோற்றம் பெற்ற வரலாற்றைப் பார்த்தோம். கொலம்பஸ்ஸின் வருகையுடன் இலத்தின் அமெரிக்காவின் முகம் மாறத் தொடங்கியது. பிரேஸிலும் இன்னும் சில சிறிய தீவுகளும் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஸ்பெயினின் கொலனிகளாகின. அங்கு குடியேறிய ஸ்பானியர்கள் புதிய அதிகாரம் மிக்க இனக்குழுவாக உருவெடுத்தார்கள். அவர்கள் தங்களை 16/17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் செல்வாக்குச் செலுத்திய ஐபீரிய ஏகாதிபத்தியத்தின் வழித்தோன்றல்களாகக் கருதினார்கள். கிறிஸ்தவத்தையும், நிறவெறியையும் தமது ஆயுதமாக்கினர்.