அரசாங்க அனுமதி மற்றும் பொறுப்பின்மை:

(Sivakumar Subramaniam)

இவை அனைத்தும் இல்லாமல், ஒரு அரச அதிகாரி “ஏதோ ஒரு காரணத்திற்காக” கையொப்பமிட்டு அனுமதி வழங்குகிறார். பின்னர், “எங்களிடம் அனுமதி உள்ளது” என்று இதற்கு ஆதரவாக, சமூகப் பொறுப்பற்ற சில வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால், இறுதியில் இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை விளைவிக்க
இந்த பிரச்சினையின் ஆழத்தையும் விளைவுகளையும் புரிந்து கொண்டு, அறிவார்ந்த உரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

(2) கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் கனிம வளங்கள்

(Sivakumar Subramaniam)

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் வடக்கு இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ் மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாகும்.

மாற்றுத்திறனாளி சமூகத்தினரை மதிக்க வேண்டும்

(R.Tharaniya* 

பொது போக்குவரத்து மட்டுமன்றி, பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் விசேட முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல நாடுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக முன்னுரிமை வழங்கப்படும். எனினும், எமது நாட்டை பொறுத்தவரையில், அவர்களை சிலர் மதிப்பதே இல்லை. பாராளுமன்றத்திலும், அவ்வாறான நிலை ஒன்று அண்மையில் ஏற்பட்டிருந்தது.  

மார்ச் 08: சர்வதேச மகளிர் தினம்

(தோழர் ஜேம்ஸ்)

இன்றைய மகளிர் தினத்தில் மகளிரைக் கொண்டாடும் தினமாக அவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் விடயமாகவும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம்.

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் மற்றும் உணவு கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் நான்காவது முறையாகவும் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (03) கூடினர்.

தைப் பொங்கலான உழவர் தினப் பொங்கல்

என்றும் என் இனிய உறவுகளே…! நண்பர்களே…..!! தோழர்களே…..!!! அனைவருக்கும் இனிய உழவர் தின வாழ்த்துகள்.

மனித குல வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத உணவை உற்பத்தி செய்வதில் பெரும் பங்காற்றும் உழவர்களின் உழைப்பை கொண்டாடும் தினமாக இத் தினத்தை நாம் பார்க்க முடியும்.

முடிச்சு மாறிகள் குறித்து அவதானமாக இருப்பது அவசியம்

பண்டிகை காலம் என்பதால், சகலரும் அவதானமாக இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கிறதோ, இல்லையோ, எனினும், பண்டிகையை கொண்டாடுவதில் சகலரும் ஆர்வமாக இருப்பர். சிலர், கடன்களை பெற்றாவது, தங்களுடைய பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பர். வீடுகளையும் சுத்தம் செய்து கொள்வர். இவ்வாறு கஷ்டப்படுவோரும் இருக்கின்றனர். மிக இலாவகமாக ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

எம்டி.வாசுதேவன் நாயர்

(Rathan Chandrasekar)


நம் இலக்கியவாதிகளுக்கு –
சினிமாக்காரர்கள்மீது ஒருவித
ஒவ்வாமை உண்டு.
ஆனால் ஓர் இலக்கியவாதியே
வெற்றிகரமான சினிமாக்காரனாக
சமைந்த வரலாறு மலையாள சினிமாவுக்குப் புதிதில்லை.
அவர்களில் ஒருவர்
எம்டி.வாசுதேவன் நாயர்.

“ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து”

ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

சென்னை உணவகங்கள்

சென்னையில் நடுத்தர வகுப்பினரால் அதிகம் பயன்படுத்தப்படும் ஓட்டல்களாக இருந்தவை பெரும்பாலும் உடுப்பி ஓட்டல்களே.எல்லா ஓட்டல்களையும் உடுப்பிக்காரர்கள் நடத்தாவிட்டாலும், பொதுவாக சைவ ஓட்டல்களை உடுப்பி ஓட்டல் என்றே குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.