“போர் நீடித்தால் மேலும் சவால்கள் எழலாம்”

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்தும், அதன் காரணமாக உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் தற்போது விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது பாராளுமன்றத்திலும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலுக்கு இடமளிக்குமாறு முன்மொழிந்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

’உலக சுற்றுலாத் தலங்களை தாக்குவோம்’

உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட பெண் கிணற்றில் சடலத்துடன் இருந்த அதிர்ச்சி சம்பவம்

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

உலக முடிவில் விழுந்த யாழ்.மாணவியை பத்திரமாய் மீட்ட இராணுவம்

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் இன்று (19) காலை சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இந்த மாணவியை இலங்கை இராணுவத்தினர், பத்திரமாய் மீட்டு, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

உச்சம் தொடும் மசகு எண்ணெய் விலை?

ஹோர்முஸ் நீரிணைப்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை ஏப்ரல் இறுதி வரை தொடருமானால், மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 180 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னாருக்கு ரூ.10 கோடி: இருவர் எதிர்ப்பு

மன்னார் நகர சபையின் நிரந்தரச் சேமிப்புக் கணக்கிலிருந்து 100 மில்லியன் ரூபாய் (10 கோடி) நிதி ஒதுக்கீட்டில், மன்னார் வைத்தியசாலையில் நவீன ரக வெளிநோயாளர் பிரிவு (OPD) ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

500 லீற்றர் எரிபொருளை சேமித்தவர் சிக்கினார்

ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ். மாணவர்கள் இன்று மாபெரும் கவனயீர்ப்பு

 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை (19) விரிவுரைகளைப் புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ். பல்கலைக்கழ மாணவி உலக முடிவில் விழுந்துவிட்டார்

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் இன்று (19) காலை சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

கால வரம்பு மீறினால் இலவசம்; கனேடிய அரசின் புதிய உத்தரவாதம்

ஒட்டாவா, ஒன்டாரியோ – கனடாவின் கூட்டாட்சி அரசு புதிய சேவை தரநிலையை அறிவித்துள்ளது.  இதன் படி, 2026 ஏப்ரல் 1 முதல், முழுமையான  கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்படும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் அது இலவசமாக வழங்கப்படும்.