கனேடிய மத்திய வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை (Policy Interest Rate) மாற்றமின்றி 2.25% என்ற அளவிலேயே தக்கவைத்துக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது.
Category: செய்திகள்
இஸ்ரேல் உளவுப்பிரிவிடம் 10 இலட்சம் டொலர் கோரினாரா ஜே.ஆர்? அம்பலமாகும் இரகசிய ஆவணங்கள்
“விவசாய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும்”
அம்பாறை மாவட்டம் பரந்தளவிலான விவசாய நிலங்களை கொண்ட நெல்லுற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டமாக திகழ்வதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா புதன்கிழமை (18) அன்று தெரிவித்துள்ளார்.
கேப்பாபிலவு காணி விடுவிப்பு: களத்தில் குதித்தது ஜனாதிபதி செயலகம்
முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்த கோரிக்கையையடுத்து, இது குறித்த விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.
தீயையடுத்து துறைமுகம் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்
மொசாட்டிடம் $1 மில்லியன் எதிர்பார்த்த ஜே.ஆர்
இலங்கையில் 1980 நடுப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த ஜேர்.ஆர் ஜெயவர்தன தனது தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை இஸ்ரேல் பிரதிநிதிகளிடம் கோரியதாக இராஜந்திர கேபிளொன்று வெளிப்படுத்தியதாக தவையர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்நிதி அளிக்கப்பட்டதா என இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சு அண்மையில் வெளிப்படுத்திய இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தவில்லை.
பாராளுமன்றமும் நாளை கூடாது
புதன்கிழமைகளை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளதால், நாளை (18) பாராளுமன்றத்தை கூட்டப்போவதில்லை என பாராளுமன்ற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற நாட்காட்டியின்படி புதன்கிழமை (18) பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் பொது சேவைகளுக்காக ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக இருக்கும் என அரசாங்கம் திங்கட்கிழமை (16) அறிவித்தது.
கறுப்புக் கொடி: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விசாரணைக்கு அழைப்பு
ட்ரம்ப் மீது பாய்ந்தது அமெரிக்க உளவுத்துறை
ஈரானின் பதிலடி தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அவருக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

