சந்தேக நபரின் பணம் மோசடி ; கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையை (ATM Card) திருடி, அதிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை (11) அன்று காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

04 யோசனைகளை முன்வைத்தார் சஜித்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் நேரடித் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  புதன்கிழமை (11) அன்று கொழும்பில் விசேட கலந்தாய்வொன்றை நடத்தினார்.

மாத்தளை வடிவேலனின் இறுதிக்கிரியைகள் நாளை

மாத்தளையின் ஆன்மீகச் செழுமையில் ஊட்டம் பெற்றவரும், மலையக இலக்கியத்தின் எரிநட்சத்திரமுமான மாத்தளை வடிவேலன் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நோர்த் மாத்தளை வைத்தியசாலை சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) பிற்பகல் நடைபெறவுள்ளதுடன் தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு மாத்தளை மந்தண்டாவலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

எலிக்காய்ச்சல் பரவல் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிய சுவாமி”

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சமரசங்களுக்கு’ உள்ளானதாக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள பதிவு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

கோட்டா சிக்குவாரா ; மீண்டும் நோட்டீஸ்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

18 டிங்கி படகுகளுடன் இருவர் கைது

திருகோணமலை, உப்பாறு பகுதியில் மகாவலி கங்கையை அண்டி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் இரு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஊர்காவற்றுறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, செவ்வாய்க்கிழமை(10) அன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போக்குவரத்து சபைக்கு 541 புதிய நியமனங்கள்

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதற்காக புதிய ‘தேசியக் கொள்கை’ ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி க்கு சர்வதேச தலைமைத்துவ விருது

பெண்களின் ‘ஊதியமற்ற’ வீட்டு உழைப்பானது குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.