தடையை மீறி போராட்டம்

யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்துள்ள நிலையில், போராட்டம், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதவாறும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவையும் மீறி, போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

‘கட்டலோனியாவின் சுயாட்சியை இல்லாது செய்வேன்’

கட்டலோனியா பிராந்தியம், தனிநாட்டுச் சுதந்திரம் பற்றிய அச்சுறுத்தல்களை நிறுத்தாவிட்டால், அப்பிராந்தியத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சியை இல்லாது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என, ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ராஜோய் எச்சரித்துள்ளார். கட்டலோனியாவில் இடம்பெற்ற சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ளவுள்ளதாக, கட்டலோனியா அச்சுறுத்திவரும் நிலையிலேயே, இந்த எச்சரிக்கையை, பிரதமர் வெளியிட்டுள்ளார்.

(“‘கட்டலோனியாவின் சுயாட்சியை இல்லாது செய்வேன்’” தொடர்ந்து வாசிக்க…)

சீமான் உண்மை முகம்

நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவ‌ரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.

(“சீமான் உண்மை முகம்” தொடர்ந்து வாசிக்க…)

‘இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்?’

(Gopikrishna Kanagalingam)
இலங்கையின் வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் சாதியின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பித்த புள்ளியென்பது, எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது கேள்விக்குரியதாக இருந்தாலும், முக்கியமான முடிவுகளைக் கொண்டுவரக்கூடிய கலந்துரையாடலாக இது மாற வேண்டுமென்பதே, அநேகமானோரின் அவாவாக இருக்கிறது.

(“‘இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்?’” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தேசிய அரசியலின் நியாயமான இருதுருவப்பட்ட நிலைப்பாடுகள்

தமிழ்த் தேசிய அரசியல் வழி நின்று செயற்படுகின்றவர்களான, சமஷ்டிக் கோரிக்கையினை வலியுறுத்தி நிற்கின்றவர்களான சி.வி. விக்கினேஸ்வரனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும், சமஷ்டித் தீர்வின் சாத்தியங்கள் குறித்து நேரெதிர் கருத்துக்களை / நேரெதிர் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்தைத் தருவதொன்றாக அமையவில்லை.

(“தமிழ்த் தேசிய அரசியலின் நியாயமான இருதுருவப்பட்ட நிலைப்பாடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

கேரளத்து ஈழவர்கள் ஒரு நோக்கு.

கேரளத்தில் வாழுகின்ற “ஈழவர்” சமூகம் குறித்த ஆய்வு, இலங்கையில் பண்டைக்காலம் முதல் வாழ்ந்து வருகிற தமிழர்கள் குறித்து அதாவது ஈழத்தமிழர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு பயனுடையதாகலாம் போல் தெரிகிறது. எனவே, இக்கட்டுரையில் கேரளத்தில் வாழுகின்ற ஈழவர் குறித்து கிடைக்கிற தகவல்களைத் தொகுத்து முன்வைக்க முனைகிறேன்.

(“கேரளத்து ஈழவர்கள் ஒரு நோக்கு.” தொடர்ந்து வாசிக்க…)

புலி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பறந்தன

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவில் உள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு பொறுக்கியெடுத்துள்ளனர்.

(“புலி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பறந்தன” தொடர்ந்து வாசிக்க…)

பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?

(Niroshini)
பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பெற்றதே ஒழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக மாற்றம் பெற்றுள்ளது.

(“பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?” தொடர்ந்து வாசிக்க…)

சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேசங்களை மதம் ஆளுகிறதா அல்லது மதங்களைத் தேசங்கள் ஆளுகின்றனவா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் கூறுவது கடினம். மதம், தேச அலுவல்களில் செலுத்தும் செல்வாக்கை நாமறிவோம். அதற்கு எந்த மதமும் விலக்கல்ல; பல தேசங்களுக்கு மதம் நல்லதொரு கவசமாகிறது. மறுபுறம், அவ்வாறு கவசமாதல், அம்மதம் அத்தேசங்களில் வரன்முறையற்று நடந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. மதத்துக்கும் தேசத்துக்குமிடையிலான உறவைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மதத்தின் பெயரால், நேற்று நிராகரித்ததொன்று, இன்று ஏற்கப்பட்டலாம்; நாளை அது மதத்தின் ஓர் அம்சமாகவும் மாறலாம். இவ்வாறு மதம் ஆட்சியாளர்களின் வசதிக்குரியதாகத் தொடர்கிறது. இதற்கும் எம் மதமும் விலக்கல்ல.

(“சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)

இம்முகாமிலிருந்த பெண் கைதிகள் எதிர்பாராத சமயங்களில் நித்திரையிலிருந்து அடித்து எழுப்பப்பட்டு சுரங்க அறைகளுள் இழுத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வெளியே துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்கும். அடுத்தது நீ தானென கைதிக்கு சொல்லப்படும். கடுமையான சித்திரவதைக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், சிறிய முகாம்களுக்கு – பெரும்பாலும் தென்மராட்சிக்கு மாற்றப்படுவர். தென்னந்தோப்புக்குள் அமைந்த இம்முகாமில் ஒரே சமயத்தில் 50 பேர் வரை சிறை வைக்கப்படுவர். இங்கு சித்திரவதை செய்வதில் இன்பம் காண்பதன் உச்சக்கட்டம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கும்.
வேறு முகாம்களிலும் பெண் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)” தொடர்ந்து வாசிக்க…)