அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு

இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம்அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே . எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம். இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று

(“அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் மாநகர சபை செய்யவேண்டியவை

யாழ் மாநகரம் நுளம்பு குப்பைமேடு அசுத்தமான குடி நீர் நோய் எனதிணறுகிறது. குருநகர் நாவாந்துறை காக்கைதீவு பொம்மைவெளி மக்களின் அவலங்கள் சொல்லி மாளாது. ஒரு சுத்தமான கழிப்பறையை யாழ் நகரில் கண்டுபிடிக்க முடியாது. நகருக்கு வருபவர்கள் உடல் உபாதைகளை அவஸ்தைகளை சகித்தாக வேண்டும். அனால் பெரும் எதிர்பார்ப்புடன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாநகரசபையில் சிலர் சமாதி கட்டுவதற்கும் சிலைகட்டுவதற்கும் மிருகசாலை அமைப்பதற்கும் பரிந்துரை செய்கிறார்கள். வடக்கு மாகாண சபை போல் மாநகரசபையும் கீழ்வாந்து போய்விடக்கூடாது. மாநகர சபை 4 ந்தர கபடதாரி அரசியல் செய்யும் இடமல்ல. இந்த மாதிரி தான் ஆரம்பம் என்றால் யாரும் மாநகர சபைக்கு உதவ முன் வர மாட்டார்கள்.
இப்படியான அராஜக போக்குகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தார்மீக அற சமூக பிரக்ஞை கொண்ட உறுப்பினர்கள் பெருமளவில் மாநகர சபையில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த திருகுதாள விளையாட்டுகளுக்கு இடமளிக்க கூடாது.

(Sritharan Thirunavukarsu)

”வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!” -தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்!-

(எஸ். ஹமீத்)

குற்றவாளியை விடுவிக்க தேசியக் கொடியுடன் ஊர்வலம்! அவர்கள் காஷ்மீரத்து முஸ்லிம்கள். பகர்வால் சமூகம் என்றும் அவர்களுக்குப் பெயர் உண்டு. நிரந்தரமாய் வாழ்வதற்கானவொரு நிலமின்றி கிராமம் கிராமமாக அலையும் அப்பாவி நாடோடிகள் அவர்கள். அந்தப் பாவப்பட்ட நாடோடிக் கூட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வாரிசுதான் எட்டே எட்டு வயதான சிறுமி ஆஷிஃபா.
காஷ்மீரின் ரோஜாப்பூப் போன்ற கவினுறு அழகுடைய அந்தச் சிறுமி ஒரு நாள் காணாமற் போய்விடுகிறாள்.
பெற்றோரும் உற்றோரும் பெருந்துக்கத்தோடு ஆஷிஃபாவைத் தேடியலைகின்றனர்.

(“”வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!” -தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்!-” தொடர்ந்து வாசிக்க…)

காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா

 

காஷ்மீரின் கதுவா நகரில் 8 வயது சிறுமியும், உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் கண்டனம் தெரிவித்து, ஆவேசமாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

(“காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா” தொடர்ந்து வாசிக்க…)

சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

சீமானுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் அவர் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது எள்ன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தியதற்காக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக, அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் சீமான் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

(“சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்

(மொஹமட் பாதுஷா)
‘கூட்டாகச் சேர்ந்து கோழி வியாபாரமும் செய்யக் கூடாது’ என்று கிராமப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். ஏனென்றால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றுசேர்வது, ஒற்றுமையின் வடிவம் என்றாலும் கொடுக்கல் வாங்கல்களிலும் வியாபாரத்தின் கணக்கு வழக்குகளிலும் நீண்டகால அடிப்படையில், மனக் கசப்புகள் ஏற்படும் என்பதே, முன்னோரின் கணிப்பாகும். எவ்வாறிருப்பினும், ஒன்றுசேர்தல் என்பது, நல்லதொரு முன்மாதிரி என்ற அடிப்படையில், கூட்டு முயற்சிகள் நவீன உலகில், வரவேற்கப்படுகின்ற சூழல் காணப்படுகின்றன.

(“மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தேசியவாதியும் நானும்

1989 இல் அச்சுவேலியைச் சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் புலி ஆதரவாளர்.தமிழப் பற்றாளர்.எனது அண்ணன் யோகசிங்கம்,அதிபர் இராசதுரை இருவருக்கும் அறிமுகமானவர்.தமிழ் இன ஒற்றுமை,பழைய தமிழர்களின்,வரலாறுகள் எல்லாம் எனக்கு கூறினார்.

(“தமிழ்த் தேசியவாதியும் நானும்” தொடர்ந்து வாசிக்க…)

பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா யோகி ஆதித்யநாத்?

உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில்…

உன்னாவ் மாவட்டத்தில்…
சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில்…

பிஜேபி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர்
அவரது சகோதரன் அதுல் சிங் இருவரும் –
பப்புசிங் என்பவரது 16 வயது மகளை
பாலியல் வன்முறை வல்லுறவுக்கு ஆளாக்கியதால்
அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

(“பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா யோகி ஆதித்யநாத்?” தொடர்ந்து வாசிக்க…)

சுவாமி விபுலானந்தர் அடிகள் – கிழக்கிலங்கைச் சமூகத்தை மேம்படுத்த முன்னெடுத்த கனவுகளைத் தொடர்வோம் ‘

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

முன்னுரை:

‘ஒரு மனிதனின் கல்வி அவனின் சொந்த வாழ்க்கையை மட்டுமல்ல,அவனின் குடும்பத்திற்கும் அவன் வாழும் சமுகத்திற்கும் எழுச்சியும் விழிப்புணர்வு கொடுக்கக் கூடியதாக இருக்கவேண்டுமென்பது எனது கருத்து. அக்கருத்து, பல வருடங்களாக லண்டனிலிருந்துகொண்டு தொடர்ந்த,பலதரப்பட்ட படிப்புகள், அனுபவங்கள்,ஆய்வுகளால் வந்ததாகும்.’

(“சுவாமி விபுலானந்தர் அடிகள் – கிழக்கிலங்கைச் சமூகத்தை மேம்படுத்த முன்னெடுத்த கனவுகளைத் தொடர்வோம் ‘” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால விடுப்பில் சென்றிருப்பதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும், அது அரசியல் நோக்கங்களும் கொண்டதாகவே இருக்க முடியும். அவர், டெல்லி வரை சென்று வருவார் என்று தெரிகிறது.

(“விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்?” தொடர்ந்து வாசிக்க…)