கேப்பாப்புலவு காணிகள்; 2 வாரங்களில் விடுவிப்பு?

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவற்றை எத்தனைக் குடும்பங்கள் கோரியுள்ளன? முகாம் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் இராணுவத் தளபதி ​லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா ஆகியோர், இன்னும் ஓரிரு தினங்களில் கலந்துரையாடி, முடிவு எட்டப்பட்ட பின்னர், அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் முறை தொடர்பில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

(“கேப்பாப்புலவு காணிகள்; 2 வாரங்களில் விடுவிப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

வெளியாள் உற்பத்தி முறை தொடர்பாகவும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் தொழிலாளர்கள் சார்பான ஆய்வுகள் அவசியம் – மலையக சமூக நடவடிக்கை குழு

1951ஆம் ஆண்டு 14 அம்சக் உடன்டிக்கையில் உள்ள தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் தொழிலார்களை வேலையில் இருந்து நீக்குவதை தடுப்பதற்கான எற்பாடுகள் இருந்துள்ளன. எனினும் 2003ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட பெருந்தோட்டத் தொழிற்துறைக்கான பிரதான கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் தொழிலாளர்களை தோட்டத் துறைமார் தொழில் இருந்து நீக்குவதனை தடுப்பதற்கான விசேட ஏற்பாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை தோட்ட முகாமை முடக்குவதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை தடுப்பதற்கான விசேட ஒழுங்குப்படுத்தல் முறைகளை கொண்டிக்காமை மிகவும் பலவீனமான அம்சம். எனவே இதனையும் ஏனைய விடயங்களையும் கருத்திற்கொண்டு தற்போதுள்ள கூட்டு ஒப்பந்தம் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இவ்வாறு மலையக சமூக நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த ‘பெருந்தோட்டத் தொழிற்துறையின் எதிர்காலமும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளும்’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய அக்குழுவின் உறுப்பினர் சுகுமாரன் விஜயகுமார் குறிப்பிட்டார்.

(“வெளியாள் உற்பத்தி முறை தொடர்பாகவும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் தொழிலாளர்கள் சார்பான ஆய்வுகள் அவசியம் – மலையக சமூக நடவடிக்கை குழு” தொடர்ந்து வாசிக்க…)

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அடைப்பு

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை தீர்ப்பு வழங்கியது.

(“பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அடைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 103 )

வட கிழக்கு மாகாண சபை தேர்தல் இந்திய இராணுவ உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்டது.இதில் ஈ.பி.ஆர.எல்.எப் உம் ஈ.என்.டி.எல் எப் உம் கூட்டாக வெற்றி பெற்றன.முஸ்லீம் காங்கிரஸ் எதிர்க்கட்சியானது.புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் வாக்களித்தனர்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 103 )” தொடர்ந்து வாசிக்க…)

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

(“சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பிலவுக்குடியிருப்பு:கொதிக்கும் நிலம்

(கருணாகரன்)

சொந்த வீட்டுக்குத் திரும்பும் வரைட, வீதியில்தான் எங்கள் வாழ்க்கை” என்று பத்து நாட்களாக வீதியிலேயே படுத்து எழும்பிப்போராடிக் கொண்டிருக்கிறார்கள், முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும் வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்” என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அனைவரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது, வீதி.

(“பிலவுக்குடியிருப்பு:கொதிக்கும் நிலம்” தொடர்ந்து வாசிக்க…)

“ஆதலினால் காதல் செய்வீர்”

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!!

“ஆதலினால் காதல் செய்வீர்”

இந்த பிரபஞ்சத்தில் இனிய மனித வாழ்வு என்பது மிக அபூர்வமான அதிசயமான வரம். வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு அன்பும் காதலும் மிக அவசியம். ஒருவருக்கு ஒருவர் என ஆரத் தழுவி வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது மிகவும் இனிமையான சுகமான ஆனந்தமான அனுபவமாகும்.

(““ஆதலினால் காதல் செய்வீர்”” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அரசியல் சீரழிவிற்கு ஜெ. தான்காரணம்

ஒருவர் காலமாகி விட்டால் அவர் குறித்த விமர்சனங்கள் கூடாது என்கிற ஒரு பொதுமை தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அதிமுக என்கிற கட்சியை மட்டுமன்றி தமிழக அரசியல் சூழலையும், மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கிச் சென்றிருக்கிறார்.
முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட 5 ஆண்டு காலத்திற்குள் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார்.

(“தமிழக அரசியல் சீரழிவிற்கு ஜெ. தான்காரணம்” தொடர்ந்து வாசிக்க…)

“சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”

“சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”·
என்று பத்து நாட்களுக்கும் மேலாக வீதியிலேயே படுத்தெழும்பிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும்வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்“ என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அத்தனைபேரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது வீதி.

(““சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”” தொடர்ந்து வாசிக்க…)

துரத்தும் அபாயம் விழிபடைவோமா…?

யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது கலைபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களிலும் சிங்கள மாணவர்கள் அதிகம் என்பதும் எதிர்காலத்தில் யாழ். பல்கலைக்கழக அனைத்து விடயங்களிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் இதனை தவிர்க்கவே முடியாது. இதற்காக இனவாதமும் பேசமுடியாது. இதை தவிர்க்க வேண்டும் என்றால் தமிழ் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வீதத்தை அதிகரிக்க வேண்டும். அதாவது super merit, merit என்ற அடிப்படையில் சித்தியடைய வேண்டும். இது பெரும் பின்னடைவில் நிற்கும் எங்கள் மாணவர் சமூகம் முன்னோக்கி செல்ல இப்போது வாய்ப்பே இல்லை.

(“துரத்தும் அபாயம் விழிபடைவோமா…?” தொடர்ந்து வாசிக்க…)