முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறியது சரியே – டொனால்டு ட்ரம்ப்

ஜெர்மனி, துருக்கியில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதல்களின் மூலம், முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற தனது திட்டம் மிகச் சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகளை முன்வைத்தார். முஸ்லிம்களுக்கு தனி பதிவேடு, அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் குடியேறத் தடை விதிப்பது போன்ற அவரின் பல திட்டங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

(“முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறியது சரியே – டொனால்டு ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் கொலை வழக்கு: தொகுப்புரைகள் நிறைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் சற்று முன்னர் நிறைவடைந்தன. தொகுப்புரைகள், இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, இன்னும் சொற்ப நேரத்தில், ஜூரிகளுக்கு தெளிவுரையளிப்பார். விசேட சிங்கள ஜூரிகள், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். 23 ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றன. சாட்சியமளிப்பு நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

(“ரவிராஜ் கொலை வழக்கு: தொகுப்புரைகள் நிறைவு” தொடர்ந்து வாசிக்க…)

த.மு.கூவின் இணை பேச்சாளர்கள் நியமனம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை பேச்சாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட எம்.பி அரவிந்தகுமார், கூட்டணியின் நாடாளுமன்ற குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இம்முடிவுகளை கொழும்பில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்தியக்குழு எடுத்துள்ளது. கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன், செயலாளர் அன்டன் லோரன்ஸ், தவிசாளர் புத்திர சிகாமணி, உப செயலாளர் சண் பிரபாகரன், சரத் அத்துகோரள ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சுவாதி கொலையில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன:

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலையாளி குறித்த நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏறக்குறைய கொலையாளியை நெருங்கிவிட்டோம். கொலையாளி விரைவில் பிடிபடுவார் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறினார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நபரின் புகைப்படத்தை சூளைமேடு மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் வீடு வீடாகக் காட்டி போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர்.

(“சுவாதி கொலையில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன:” தொடர்ந்து வாசிக்க…)

வாவ் கண்ணம்மா

டிசம்பர் 5 ம் தேதி மாலை, முதல்வர் தன் இறுதி மூச்சுகளில் வாழ்ந்து கொண்டிருந்த தருணம், பிரளயத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட பறவைகள் போல மொத்த மக்களும் தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். என் கூட்டை நோக்கி விரையும் முன், என் கூட்டு பறவைகளுக்கான அடுத்தநாள் அத்தியாவசிய உணவை வாங்க கே.கே.நகர் அய்யப்பன் கோயில் அருகில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன். ஆனால் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல் கலவரமும் கவலையும் ஒரு சேர அங்காடியின் ஒவ்வொரு அங்குலமும் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. நானும் சில உணவு பொருட்களை தேடி அதில் நீந்த தொடங்கினேன். தீடிரென ஒரு குரல் அயர்ச்சியும் அன்புமாக என்னை நோக்கி ஒலித்தது.

(“வாவ் கண்ணம்மா” தொடர்ந்து வாசிக்க…)

பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம்

(காரை துர்க்கா)

நாட்டில் புலிப் பயங்கரவாதிகளால் முப்பது வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒழிக்கப்பட்டுள்ளன. புலிப்பிரிவினைவாத இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முப்பது வருட இருண்ட யுகத்திலிருந்த வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழ் மக்கள் பெரும் உவகையுடன் வாழ்கின்றனர். தென் பகுதி அரசியல்வாதிகளின் இவ்வாறான சொல்லாடலைத் தமிழ் மக்கள், கடந்த ஏழு எட்டு வருடங்களாகக் சகிப்புத் தன்மையுடன் கடந்து வந்துள்ளனர் என்பது, கடந்த நவம்பர் 27 ஆம் திகதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அன்றைய தினம் வடக்கு, கிழக்கில் உள்ள துயிலும் இல்லங்களில் நடைபெற்ற சம்பவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.

(“பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை!

(வானவில் – 72 வந்துவிட்டது)

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில்நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளப போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.

(மேலும்….)

பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல

சாதாரணமான தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தாங்கள் இனவாதிகள் அல்ல என்பதை அடிக்கடி நிரூபித்துள்ளனர். ஒட்டுமொத்த சமூகத்தையும் இனவெறியூட்டும் இனவாதிகளின் முகத்தில் கரி பூசியுள்ளனர். சிங்களவர்கள் மத்தியில் மட்டுமல்ல, தமிழர்கள் மத்தியிலும் இனவாதிகள் தமது அரசியல் நலன்களுக்காக ஆடும் நாடகங்கள் எடுபடுவதில்லை.

(“பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ஈழத்து புரட்சிப்பாடகர் ஷாந்தன் அவர்களின் பிறந்தநாளாம்…. இந்நாளில் அவரை பற்றி கொஞ்சம் நினைத்து பார்க்கின்றேன்…..

2010 ஆம் ஆண்டு, போர் முடிவுற்று பாதைகள் திறக்கப்பட்டு…. மக்கள் வழமைக்கு திரும்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நல்லூர் திருவிழாவும் வந்தது. DAN TV யாழ் ஒளி தொலைக்காட்சி அப்போதுதான் மெல்ல யாழில் காலூன்ற ஆரம்பித்து இருந்தது…. நல்லூர் திருவிழாவில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி மக்களிடம் நம் தொலைக்காட்சியை ஜனரஞ்சக படுத்த வேண்டும்…..

(“இன்று ஈழத்து புரட்சிப்பாடகர் ஷாந்தன் அவர்களின் பிறந்தநாளாம்…. இந்நாளில் அவரை பற்றி கொஞ்சம் நினைத்து பார்க்கின்றேன்…..” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது

(போராளிகளை நினைவு கூர்வதற்கு ஒரு பொதுத் தினம் ஒன்று கண்டறியப்படவேண்டும். இதில் ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்து மரணித்த அனைவரும் நினைவு கூரப்படவேண்டும் என்பதே சூத்திரம் இணையத்தளத்தின் நிலைப்பாடு ஆகும். இதன் ஆசிரியர் இந்தக்கருத்தை பத்துவருடங்களுக்கு மேலாக பல தளங்களிலும் வலியுறுத்தி வருகின்றார். கருணாகரனின் இக்கட்டுரை புலிகளின் மாவீரர் தினத்தை மட்டும் பேசுவதில் தனது கவனத்தை செலுத்தியிருக்கின்றது ஒரு பன்முகப்படுதப்பட்ட தன்மை வணக்கம் செலுத்துவதிலிருந்தாவது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை சூத்திரம் மீண்டும் வலியுறுத்துகின்றது – ஆர்)

(கருணாகரன் )

விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி நிகழ்ந்திருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு, அது முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும், அந்த நிகழ்வின் அரசியல் பரிமாணம் மிகவும் விசாலமாகக் காணப்படுகின்றது. அந்த நிகழ்வையொட்டி, தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக மாவீரர் குடும்பங்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்நிலைகளும் அபிப்பிராயங்களும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றிய கவனத்தையே ஈர்க்கிறது.

(“ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது” தொடர்ந்து வாசிக்க…)